Header Ads



சிறுவர்களின் மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சியாகும்

(மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்)

சிறுவர்களின் மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சியாகும் என்ற வகையில் அவர்களை சந்தோசமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே சிறுவர் சமவாயம் எமக்கு வழிகாட்டுகின்றது.  சிறுவர் சமவாயம் 1989 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இலங்கை 1991ம் ஆண்டு இதில் கையெழுத்திட்டது. சிறுவர் உரிமை சமவாயம் உலகின் அனைத்து சிறுவர்களுக்கும் பொருத்தமானது. அச்சமவாயத்தில் கையெழுத்து  வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதன் உறுப்புரைகளை மதித்து நட்பதே அவர்களது கடமையாகும். 

குழந்தை பிறக்கும் போதே உயிர்வாழும் உரிமையுடனேயே பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்யப்படவும், பெயரைப் பெறவும், தேசிய இனத்தைச் சார்ந்து வாழவும், குழந்தை பெற்றோரை அறியவும் அவர்களிடமிருந்து பராமரிப்பைப் பெறவும் உரிமை கொண்டுள்ளது.
சிறுவர் உரிமைகளின் மிகவும் பிரதான பகுதிகள் நான்காக அமையும். உயிர் வாழ்தல், அபிவிருத்தி, பாதுகாப்பு, பங்குபற்றல் என்பவைகளாகும்

உயிர்வாழ்வதற்கான உரிமை 

ஒவ்வொரு பிள்ளையும் இயற்கையாகவே கிடைத்துள்ள உயிர்வாழும் உரிமையைக் கொண்டுள்ளதுடன் யுத்தம், இயற்கை அனர்த்தம், எச்.ஐ.வி.(எயிட்ஸ்), மந்தபோசனை, அபாயகரமான தொழிலில் அமர்த்தல் மற்றும் சித்திரவதை போன்ற எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல்; 
அவனின் அல்லது அவளின் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுவர் உரிமைக்கு மதிப்பளிக்கப்படுவதனை அரசுத் தரப்பினர் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். 

அபிவிருத்திக்கான உரிமை 

சிறுவர்களை வளர்ப்பதிலும் அபிவிருத்தியடையச் செய்வதற்குமான ஆரம்பப் பொறுப்பு பெற்றோரிடம் அல்லது சட்டமுறையான பாதுகாவலரிடம் உள்ளது. சுகாதாரக் கவனிப்பு வசதிகளை அடைந்து கொள்வதற்கான அவனின் அல்லது அவளின் உரிமை சமூகக் காப்புறுதி அடங்களான சமூகப் பதுகாப்பின் நலனைப் பெறும் உரிமை உண்டு. 
உடல், உள, ஆன்மீக, ஒழுக்க, சமூக மேம்பாட்டுக்கு ஏற்றவாறான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் உரிமையும் உண்டு. 

பங்குபற்றுவதற்கான உரிமை
பொருத்தமான வழிமுறை மற்றும் வழிகாட்டல் வழங்குவதற்குள்ள பெற்றோரின் அல்லது அல்லது சட்ட பாதுகாவலர்களின் பொறுப்புக்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றினைக் குறிக்கும.;
தானாகவே கருத்துக்களை எண்ணித்துணியும் ஆற்றலுடைய பிள்ளைக்கு, அதனைப் பாதிக்கும் எல்லா விடயங்களிலும் அவனின் அல்லது அவளின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையுண்டு. 

பாதுகாப்பிற்கான உரிமை 
பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டவாக்க, நிருவாக, சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகள் கிடைக்கப்பெற வேண்டும். அத்துடன் உள்ளத்தைப் பாதிக்கக்கூடிய பொருட்களைச் சட்டவிரோதமாக பிள்ளைகள் பாவிப்பதனைவிட்டும் பாதுகாப்பு பெறும் உரிமையுண்டு.
எல்லா வகையான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு பெற சிறுவர்களுக்கு உரிமையுண்டு. அத்துடன் சிறுவர் கடத்தப்படுதல், விற்றல் மற்றும் பலாத்காரமாகக் கொண்டு செல்லப்படுதலை தடுத்தல் என்பவற்றிற்கான பாதுகாப்பு சிறுவர்களுக்குண்டு.

சிறுவர்களானவர்கள்; 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் அனைவரும் சிறுவர்களென ஜக்கிய நாடுகள் சிறுவர் சமவாயத்தின் குறிப்பிடப்படுகின்றது.   சிறுவர்கள்  பாதுகாப்பிற்கும், அன்பிற்கும், கௌரவத்திற்கும் உரித்தானவர்கள். 

சிறுவர்கள் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்களும், கொள்கைகளும் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன இருக்கின்ற போதும். சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையும் தொழில்களிற்கு அமர்த்தியிருப்பதைம் காணக்கூடியதாகவுள்ளது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசும், பொதுமக்களும் சட்டரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளனர். 

இலங்கை சட்டரீதியாக ஓர் இரட்டைத்தன்மை கொண்ட நாடாக காணப்படுவதனால், சர்வதேச சட்ட ஏற்பாடுகளை நேரடியாக உள்நாட்டு சட்டமாக அமுல்படுத்தவோ சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கவோ முடியாது. அதாவது ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை சமவாயத்தில் உள்ள விடயங்களை இலங்கை நீதிமன்றங்கள் நேரடியாக சட்டமாக அமுல்படுத்த முடியாது. இச்சர்வதேச சட்டங்கள் முதலில் உள்நாட்டு சட்டமாக கொண்டு வரப்பட்டால் மாத்திரமே எமது நாட்டு நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெற முடியும். 

5 வருடங்களுக்கு குறைவான வயதையுடைய குழந்தை எவரும் ஒரு சிறுபராயத்த வராவார். 5 வருடங்களுக்கு மேற்பட்டவரும் ஆனால் 14 வருடங்களுக்கு குறைவான வயதையுடைய எந்தவொரு நபரும் சிறுவரொருவராவார். கல்வி கட்டளைச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது.    
14 வயதுக்குட்பட்ட நபரொருவர் சிறுவராகவும், 14-16 வயதுக்குட்பட்ட எந்த நபரும் இளைஞராகவும் கருதப்படுகின்றார்.  சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச்சட்டம், கடை காரியாலய கட்டளைச்சட்டம் விரிவாக இதுபற்றி எடுத்துக் கூறுகின்றது. 

14 வருடங்களுக்கு மேற்பட்ட ஆனால் 18 ஆண்டுகளுக்குட்பட்ட வயதையுடையர் இளம் ஆளொருவராவார். பெண்களையும் இளம் ஆட்களையும் சிறுவர்களையும் தொழிலுக்கமர்த்தல் சட்டம் இது பற்றி எடுத்துக் கூறுகின்றது.

16 வருடங்களுக்கு குறைந்த வயதையுடைய பெண்ணொருவர் யுவதியொருத்தியாவார்.  அலைந்து திரிபவர்கள் கட்டளைச் சட்டம் குறிப்பிடுகின்றது.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆளொருவர் வயதுவந்தவரொருவராக கருதப் படுகின்றார். 1895ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க வயது முதிர்ச்சிக் கட்டளைச் சட்டம் இதனை விளக்குகிறது.
மனித உரிமைகளே சிறுவர் உரிமைகளின் அடிப்படை என்பதால் அனைத்து சிறுவர்களும் சமத்துவமானவர்கள் என்பதை மனதிற் கொள்வோமாக.


1 comment:

  1. யா அல்லாஹ் குழந்தைகளையும் நீயே படைத்தாய் அவர்களின் உரிமையிகளையும் நீயே கொடுத்தை..யார் இவர்கள் குழந்தைகளுக்கு உரிமைகள் இயற்கையாக கிடைத்தது என்று சொல்ல...எல்லாம் வல்ல நாயனி நீயே போதும் அவர்களை காக்க, சட்டங்கள் ஏதும் தேவையில்லை

    ReplyDelete

Powered by Blogger.