Header Ads



கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக போக்குவரத்து பாதை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்கு


தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக போக்குவரத்து பாதை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

கடல் மணலை பயன்படுத்தி இயற்கையான சூழலுடன் இலங்கையில் அமைக்கப்படுகின்ற இரண்டாவது அதிவேக போக்குவரத்து வீதி இதுவாகும்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வருகைத்தரும் பல நாட்டின் தலைவர்கள் இந்த வீதியை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இதனூடாக கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை வந்தடைய 20 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

சீனாவின் அனுசரனையில் நிர்மாணிக்கப்படும் இந்த அதிவேக வீதி அமைக்கும் பணிகளுக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று இணை மத்திய நிலையங்களினூடாக இவ் அதிவேக வீதியை அடைய முடியும். 25.8 கிலோ மீற்றர் நீளமுடைய இந்த அதிவேக வீதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வீதி சமிக்ஞைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் நாட்டில் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.