Header Ads



இஹ்வான்களுடன் எகிப்திய சர்வதிகார இராணுவம் நேரடி ஆயுதமோதல்

எகிப்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி அதிபர் முகமது மோர்சி இராணுவத்தினால் பதவி இறக்கம் செய்யப்பட்டார். அதுமுதல் அந்நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் இன்னும் ஓயவில்லை.பதவி இறக்கம் செய்யப்பட்ட மோர்சிக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கத்தினரும் அவரது கட்சியினரும் போராடி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நகரங்களில் தலைநகர் கெய்ரோவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள கெர்டசாவும் ஒன்றாகும்.  இந்த நகரத்தில்,மோர்சிக்கான ஆதரவு அதிகமாகவும்,அரசு துருப்புகளுக்கு எதிரான விரோதம் அதிகரித்தும் காணப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியன்று மோர்சி ஆதரவாளர்களின் கெய்ரோ முகாமில் ராணுவம் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது. இதன் தொடர்ச்சியாக கெர்டசாவில் இருந்த பிரதானக் காவல் நிலையம் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டது.

கையெறி குண்டுகளை வீசியும், பின்னர் தீயிட்டும் அந்தக் காவல் நிலையம் அழிக்கப்பட்டது.இந்தத் தாக்குதலில் 11 காவலர்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்திலிருந்து எகிப்து ராணுவம் கெர்டசா நகரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரச் செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.  நேற்று இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக பாதுகாப்புத் துறையும், ராணுவத்தினரும் கெர்டசா நகரத்தின் மீது தாக்குதல்கள் நடத்தினர்.

ஆயினும், அவர்களை அங்கிருந்த ஆயுதமேந்திய போராளிகள் திருப்பித் தாக்கியதில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி கொல்லப்பட்டார். குறைந்தது ஒன்பது காவலர்கள் கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் இறந்தனர். 

கெர்டசாவை கைப்பற்றும்வரை பாதுகாப்புத்துருப்புகள் ஓயாது என்று நேற்று காலை உள்துறை அமைச்சகத்தின் தகவல் அதிகாரி ஹனி அப்டெல் லதிப் தெரிவித்துள்ளார்.இதுவரை, 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கையெறி குண்டுகள் உட்பட ஒரு டஜனுக்கும் ஏற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.