Header Ads



அமெரிக்கர்களின் பிரச்சினை - விழிப்புணர்வு பிரசாரத்தில் ஒபாமாவின் மனைவி

அமெரிக்க மக்கள் பெரும்பாலானோர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். குழந்தை பருவத்திலேயே பலர் அளவுக்கதிகமான உடல் பருமனுடன் உள்ளனர். இதை கட்டுப்படுத்த ஏராளமான மாத்திரைகளும், உடல் பயிற்சி கருவிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதொடர்பான விளம்பரங்கள் தினமும் டிவி, இன்டர்நெட்டில் வெளியிடப்படுகின்றன. இதையடுத்து உடல் பருமனுக்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்க அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதற்காக அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து, நமது உடல் நலனை பாதுகாத்து கொள்வதும், நமது குடும்பத்தினரின் உடல் நலனை பாதுகாத்து கொள்வதும் மிகவும் முக்கியம். அதை எளிய வழியில் செய்ய முடியும். அதிகப்படியான உடல் பருமனை குறைக்க நாள்தோறும் கூடுதலாக ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள். தண்ணீர் பருகுவது உடல் பருமனை குறைப்பதோடு மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் வாட்டர் டவுனில் வைத்து தொடங்கிய இந்த பிரசாரத்தின் போது பிரபல நடிகை ஈவா லாங்கோரியாவும் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

No comments

Powered by Blogger.