குர்ஆன் பிரதிகளை தீமூட்ட முயற்சித்த கிறிஸ்தவ போதகர் கைது
செப்டெம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தில் ஆயிரக் கணக்கான அல் குர்ஆன் பிரதிகளை தீமூட்ட முயற்சித்த அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ போதகர் டெர்ரி ஜோன்ஸ் 11-09-2013 கைது செய்யப்பட்டார். ஒரு டிரக் வண்டி பூராகவும் இருந்த சுமார் 3000 அல் குர்ஆன் பிரதிகளை தீமூட்ட முற்பட்டபோதே 61 வயதான ஜோன்ஸ் கைது செய்யப்பட்டார்.
அவர் சட்ட விரோதமாக எரிபொருளை கொண்டு சென்றதாகவும் பொது இடத்தில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கூறியே புளோரிடா பொலிஸார் கைது செய்துள்ளனர். டெர்ரி ஜோன்ஸ் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் செப்டெம்பர் 11 நினைவு தினத்தில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்து சர்ச்சையை கிளப்பிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Tn
Post a Comment