Header Ads



கிழக்­கு மாகாணத்தை அரே­பிய நாடாக்க முயற்சி - ஞானசார­ தேரர்

(vi) முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த வட மாகாணமே எமக்கு வேண்டும். பிரிவினை வாதத்தினை நாம் தோற்றுவிக்கவும் இல்லை பிரிவினைக்கு இடமளிக்கப்போவ­து­மில்லை என பொது­ப­ல­சேனா தெரி­வித்­துள்­ளது. மேலும் விக்கி­னேஸ்­வ­ரனின் திட்டம் ஒரு போதும் பலிக்கப் போவ­தில்லை. தமிழர், முஸ்­லிம்­களை ஆத­ரிக்கும் அமைப்­பாக நாம் செயற்­பட்டு நாட்டை ஒற்­று­மை­யாக வைத்­தி­ருப்போம் எனவும் அவ் அமைப்­பினர் தெரி­வித்­தனர்.

பொது­பல சேனா­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்­தனர். இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்,

பிர­பா­கரன் வடக்கின் தீவி­ர­வாத முன்­ன­ணி­யா­கவும் ருத்­ர­கு­மாரன், அன்டன் பால­சிங்கம் ஆகியோர் புலம்­பெயர் தமிழர் முன்­ன­ணி­யா­கவும் செயற்­பட்­டுள்­ளனர். அதே வழியில் இன்று நவ­நீ­தம்­பிள்ளை சர்­வ­தேசம் சார்­பா­கவும் விக்கி­னேஸ்­வரன் பிரி­வினை வாத முன்­ன­ணி­யா­க­வுமே செயற்­ப­டு­கின்­றனர். அன்று விடு­தலைப் புலிகள் செய்ய முடி­யா­ததை இன்று நவிப்­பிள்ளை, விக்கி­னேஸ்­வரன் செய்ய முயன்­றாலும் அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க போவ­தில்லை.

மேலும் நாம் தமிழ், முஸ்லிம் மக்­களை ஆத­ரித்தே செயற்­ப­டு­கின்றோம். இலங்­கையில் முஸ்­லிம்கள் மீது சிறு காயத்தைக் கூட நாம் விளை­விக்­க­வில்லை. அதற்­கான ஆதா­ரங்­களும் உள்­ளன. அரே­பிய நாடுகள் எமது பெளத்த அமைப்­பிற்கும் இலங்­கையின் பெளத்த மக்­க­ளுக்கும் கறுப்புச் சாயம் பூசி கிழக்­கினை அரே­பிய நாடாக மாற்ற நினைக்­கின்­றன. சர்­வ­தேச தீவி­ர­வா­தி­களும் இலங்­கையில் உள்ள தீவி­ர­வாத அர­சியல் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து கிழக்கு வாழ் முஸ்­லிம்­களை மட்­டு­மன்றி ஒட்டு மொத்த முஸ்­லிம்­க­ளையும் தீவி­ர­வா­தி­க­ளாக மாற்றி நாட்டை சீர­ழிக்க நினைக்­கின்­றனர்.

இலங்­கையில் பெளத்த மதமும், பெளத்த மதக் கொள்­கை­களும் அழிந்­து­கொண்டே செல்­கின்­றன. அன்று எமது பெளத்த மதத்தைக் காப்­பாற்­றிய தர்­ம­பா­லவைப் போன்று இன்றும் லட்­சக்­க­ணக்­கான தர்­ம­பா­லாவை உரு­வாக்க வேண்டும் எமது கொள்­கை­க­ளுக்­கா­கவும் பெளத்­தர்கள் வாழ வேண்டும். எனவே எதிர்காலத்தில் அனைத்து பெளத்த அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அந காரிக தர்மபாலவின் கொள்கையுடைய பெளத்தர்களை உருவாக்கி நாட்டில் உள்ள தீவிரவாதத்தினை அழித்துக்காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. ஞானசூனியரை நல்ல பரிசாரிக்கிட்ட காட்டி ஊதிப்பார்க்கனும்

    ReplyDelete
  2. அண்மையில் பொதுபல சேனா அமைப்பினால் சிங்கள கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசுப் பொருட்களும் ஆசியும் வழங்கப்பட்டது,பௌத்தர்களின் சனத்தொகையை அதிகரிக்கும் முயற்சியின் முதல்படி இது. அவர்கள் ஏற்கனவே மேடைகளில் கூறியதை நடைமுறையில் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், முஸ்லிம்களாகிய நாம் இன்னும் சில நாட்களில் எல்லாம் முடிந்து விடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறோம். BBS ஆல் பாமர மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட விசக்கருத்துக்கள் எந்த ஆட்சி மாற்றத்தாலும் மாறும் என்பது கடினம்தான். மிக மிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. என்பதை சகலரும் கவனத்தில்கொள்வது மிக முக்கியம்

    ReplyDelete

Powered by Blogger.