ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க மடல்..!
(அப்துல் வஹாப்)
மிக நீண்ட கால அரசியல் வரலாற்றைக்கொண்ட உங்களின் அரசியல் பயணத்தில் உங்களையும் உங்கள் அரசியல் முன்னெடுப்புக்களையும் மிக நெருக்கமாக அவதானித்ததன் அடிப்படையிலேயே இந்த மடலினை தங்களுக்கு வரைகின்றேன்.
உங்கள் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கால கட்டங்களிலும் நீங்கள் மிக முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தாலும் அண்மைக்காலமாக நீங்கள் வெளியிட்டு வருகின்ற ஒரு சில கருத்துக்கள் தொடர்பில் உங்களிடம் சில விடயங்களை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவதற்காகவே இம்மடலினை எழுதுகின்றேன்.
அமைச்சர் அவர்களே! கடந்த 25ம் திகதி புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடை பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் '18ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மிகப்பெரியதொரு பாவத்தைச் செய்துள்ளோம்' எனக் கூறியிருந்தீர்கள். உண்மையில் இப்படி மனச்சாட்சியுடன் சிந்திக்கின்ற தன்மையினை இப்பொழுதாவது அள்ளாஹ் உங்களுக்கு கொடுத்ததற்காக அவனுக்கு நன்றி சொல்லவேண்டும் அத்துடன் நீங்கள் வெளியிட்ட இவ்வாதங்கமானது, உண்மையில் நீங்கள் மனதால் உணர்ந்து இந்நாட்டு மக்களின் மீது கொண்ட அக்கறையின் காரணத்தால் வெளியிடப்பட்ட கருத்தாக இருக்குமானால், உண்மையில் அது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இது உங்கள் மனதில் தோன்றிய உண்மையான மாற்றமா? அல்லது தேர்தலின் போது மக்களை முட்டாள்களாக்கும் உங்களின் வழமையான யுக்திகளில் ஒன்றா? எனும் சந்தேகம் பொதுமகனாகிய எனது மனதில் எழுவதை என்னால் தவிர்க்க முடியாதுள்ளது.
அதற்கும் காரணம் நீங்கள்தான். எந்த 18ம் திருத்தச்சட்டத்தைப்பற்றி இப்பொழுது பேசிக்கொண்டிருக்கின்றீர்களோ அதில் காணப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உட்பட அனைத்தையும் மிக வன்மையாக எதிர்த்து, 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது நீங்களும் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சூராவளிப்பிரச்சாரம் மேற்கொண்டதனை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? உங்களை நம்பி நாங்கள் உங்களுக்கு வாக்களித்து பதவிக்கதிரைகளில் உங்களை அமர்த்தியதும் எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. 2011ம் ஆண்டு 18ம் திருத்தசட்டமூலம் கொண்டு வரப்பட்ட பொழுது அதனை இந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்களும் குறிப்பாக இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் சிலரும் கூட எதிர்த்த நிலையில், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு அச்சட்டத்தை ஆதரித்தீர்கள்.
இந்த 18ம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததன் ஊடாக இந்நாட்டில் ஏலவே அமுலில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மேலும் பல மடங்கு பலமளித்து, இந்நாட்டில் ஒர் சர்வாதிகார ஆட்சியினை தோற்றுவித்துள்ளீர்கள். இப்பதினெட்டாம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் அமுலில் இருந்த இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி ஒருவர் இரண்டு முறை மாத்திரமே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகிக்கமுடியும். இதன்காரணமாக இவ்வாறு தேர்வு செய்யப்படும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் காலம் நெருங்கும் தருணம், நாடும் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த ஆட்சியாளரை எதிர்பார்க்கத்தயாராகிவிடும். இந்த காலப்பகுதியில் நாட்டின் சிறுபான்மை மக்களின் உதவியையும் ஆதரவையும் அனைவரும் வேண்டி நிற்கவேண்டிய நிலையிருந்தது. ஜனாதிபதியும் அவர் சார்ந்த கட்சியும் கூட தங்கள் கட்சி சார்பான ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆரதவு திரட்டும் வகையில் ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் காலடிக்கும் வரவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் இருந்தது. இந்த தருணம் சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகள் தொடர்பில் பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசுகின்ற காலப்பகுதியாகும். ஆனால் 18ம் திருத்தச்சட்டம் என்ற ஒன்றிற்கு ஆதரவளித்ததன் மூலம் இத்தனையையும் மாற்றி, தனது பதவிக்காலம் முடிவடையப்போகும் தறுவாயிலும், தனது அதிகாரத்தினை படிப்படியாக இழந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலும், மக்களின் நன்மதிப்பைப்பெற்;றுக்கொள்ள மக்களை நாடி வரவேண்டிய ஜனாதிபதியினை இன்று ஒரு சர்வாதிகார போக்கிற்குள் இருத்தி, தன்னை கேள்வி கேட்கும் பெரும்பான்மையின மக்களையேசுட்டுத்தள்ளுகின்ற அதிகாரத்தினை அவருக்கு வழங்கியதும் நீங்கள் தான் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது..
அதே போன்றுதான் இன்று யுத்தம் முடிவடைந்த நிலையிலும் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற உரிமை மீறல்கள், அதன்போது அரசின் பாரபட்ஷமான நடவடிக்கைகள் என்பவற்றிற்கு பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்ததும் நீங்கள் தான் என்பதையும் உங்களால் மறுக்கமுடியாது. இந்தத்திருத்தச்சட்டத்தின் காரணமாக மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் ஒருமித்த பாராளுமன்ற அதிகாரம் முழுமையாக குறைக்கப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரம் ஓங்கச்செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று மக்கள் அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டு மோசமான குடும்ப அரசியல் தலை தூக்கியுள்ளது.
இத்திருத்தச்சட்ட மூலத்திற்கு நீங்கள் ஆதரவளித்ததன் ஊடாக நிகழ்ந்துள்ள மிகப்பயங்கரமான மற்றொரு விழைவுதான் இந்த நாட்டின் நீதி ,பாதுகாப்பு, சட்டத்துறைகளுக்கான சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டமையாகும். அதனாற்தான் இன்று இந்த நாட்டில் நீதியும் சட்ட ஒழுங்குகளும் சுயாதீனமற்றவையாக்கப்பட்டு அவை அரசியல் வாதிகளின் மகுடிகளுக்கு ஆடும் பாம்புகளாய் மாறியிருக்கின்றன. இன்று காவல் துறையினர் கைகட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சுயாதீனமான நீதியான தேர்தலை நடாத்துவது கூட இன்று இந்த நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவேதான், “இச்சட்டமூலம் அமுலுக்கு கொண்டுவரப்படுவதானது, நாட்டின் அனைத்து இன மக்களையும் பாதிக்கும், நாட்டின் இறைமையை கேள்விக்குள்ளாக்கும். எனவே இந்த வரலாற்றுத்தவறினை முஸ்லிம்களின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட கட்சியின் தலைவர் எனும் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு நீங்கள் செய்தால அது இந்த நாட்டு மக்களின் முன்னால் முஸ்லிம்களை தேசத்துரோகிகளாகவும் பெரும் முட்டாள் சமூகமாகவும் சித்தரித்து விடும் என்பதற்காகவே, கட்சி சார்ந்தும் தனிப்பட்ட ரீதியிலும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும், புத்திஜீவிகளும் உங்களை நட்பு ரீதியாகவும் உத்தியோகபூர்வமாகவும் சந்தித்து, இதற்கு ஆதரவளிக்க வேண்டாம்” எனக்கேட்டிருந்தனர். ஆனால் ஒரு சில அமைச்சுப்பதவிகள், உங்களுக்கும் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைத்த ஒரு சில மேலதிக பொலீஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மேலதிக சில சொகுசு வாகனங்கள், ஒரு சில அரச பதவிகள் என்கின்ற மிகச்சின்னத்தனமான பேரம்பேசலுக்கு உடன்பட்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் எந்தக்கவலையும் இன்றி அடகு வைத்தீர்கள். ஆனால் நீங்கள் செய்த மாபெரும் அரசியல் தவறின் மோசமான விளைவுகளை நீங்கள் புரிந்து கொள்ள இரண்டரை வருட காலமும் இரண்டு மாகாண சபைத்தேர்தல்களும் உங்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது என்பதனைப் பார்க்கின்ற பொழுது,மிகக்கவலையாகவும் உங்கள் திடீர் மன மாற்றம் தொடர்பில் மிக சந்தேகமாவும் இருக்கின்றது.
எந்தவொரு தவறும் வெறுமனே தவறு என்று அதனை செய்தவர் ஒத்துக்கொள்வதனால் மட்டும் நிவர்த்தி செய்யப்படமாட்டாது. உண்மையில் அத்தவறினைச்செய்தவர் அதனை மனதால் உணர்ந்து அதற்காக உண்மையில் வருந்துவாராயின் அத்தவறுக்கான பிராயச்சித்தங்களைச்செய்ய அவர் முன்வர வேண்டும்.;அப்படியாக இருந்தால் நீங்கள் வெறுமனே பாவம் செய்து விட்டோம் என ஒத்துக்கொள்வதால் எந்த நன்மையும் விழையப்போவதில்லை. எனவே மேற்சுட்டிக்காட்டப்பட்ட எந்த எந்த விடயங்கள் எல்லாம் 18ம் திருத்தச்சட்டத்தின்மூலம் இந்நாட்டு மக்களுக்கு பாதகமாக மாறியிருக்கின்றதோ அத்தனை விடயங்களையும் மீண்டும் நிவர்த்தி செய்வதற்கு இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் முழுமையாகப் பாடுபடவேண்டும். இந்தத்தவறுகளை நிவர்த்தி செய்யவும் மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை தோற்றுவிக்கவும் இந்த சர்வாதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கவும் நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை இந்த இடத்தில் நீங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். அதற்காக ஏதாவது ஒரு நம்பிக்கையான பணியினை நீங்கள் பகிரங்கமாக ஆரம்பித்து வைப்பீர்களாக இருந்தால் எங்கள் சந்கேகங்கள் சற்று தளரக்கூடும்.
ஆனால் ஒரு பக்கத்தில் இவ்வாறெல்லாம் தேர்தல் மேடைகளில் பேசி பிள்ளையை கிள்ளி விடுகின்ற நீங்கள் மறுபக்கத்தில் ஒலிவில் துறைமுகப்பணிக்காக ஜனாதிபதியை புகழோ புகழ் என்று புகழ்கின்றீர்கள் கண்டியில் வைத்து ஜனாதிபதியையும் இந்த நாட்டையும் நாங்கள்தான் பாதுகாக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் தொட்டிலும் ஆட்டுகிறீர்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் உடைக்கப்பட்டது குறித்து நவிப்பிள்ளை வினவினால், அப்படி ஒன்றுமில்லை என பூசி மெழுகி விட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறியதும் பாதுகாப்பு செயலாளர் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று சொன்னதற்காக அறிக்கை விடுகின்றீர்கள் .கேட்டால் நான் ஒரு அரசியல் நடிகன் நான் நடித்துத்தான் ஆகவேண்டும் என்றும் சொல்கிறீர்கள். இத்தனை காலமாக இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்லும் கௌரவமான தலைவனாக உங்களைக் காட்டிக்கொண்ட நீங்கள், இப்பொழுது மிக மலினமான ஒர் சுயநல அரசியல் நடிகன்தான் நீங்கள் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறீர்கள். .
மொத்தத்தில் இந்த சமூகத்திற்கு எதைத்தான் சொல்லவருகின்றீர்கள்? இப்படி மிகக்குழப்பமான மனோநிலையிலிருக்கும் உங்களை நம்பி மீண்டும் ஒரு முறை முஸ்லிம் மக்கள் எப்படி வாக்களிப்பது? எனவே தயவு செய்து நான் மேற்குறிப்பிட்டு சொன்ன விடயங்களை நிவர்த்திக்க ஏதாவது அறிவுபூர்வமாகவுமஆக்கபூர்வமாகவும் முயற்சி செய்யுங்கள.; பதவியையும் கட்டிக்கொண்டு மக்களையும் முட்டாள்கள் ஆக்க மீண்டும் ஒரு முறை முயற்சிக்காதீர்கள் என்பதனை இந்த நாட்டின் அனைத்து மக்கள் சார்பிலும் உங்களை வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
ethai naan 100kko 200% atharikkeran.
ReplyDeleteWe have experienced with him as has got many ministries for no use for the Muslim community. Trusting him is pointless. As per our Prophet Muhammed - PBUH - saying, we don't have to repeat same mistakes again and again.
ReplyDeleteDear Abdul Wahab,
ReplyDeleteI really appreciate your article and courages to put it here. But this Rauff Hakkem knows every things and he knows that all we stupids will vote them again and again.
Because you and me thinking about our muslims future but for him its purely a buisness.
So don't make your BP high and take it easy!
Only his and his companian's generation should pay for it insa'Allah!!!
Almighty Allah knows the best!
நீங்க சொல்வது 10000000000000000000% correct
ReplyDeletebut......
நாய் வாலை நிமித்த முடியாது
அப்துல் வகாப், மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை சுட்டிக் காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றி. இந்த மடல் இவ்விடத்துடன் நின்று விடாது, இந்த மடலை அச்சடித்து ஒவ்வொரு ஊர்களிலும் ஏன் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு முஸ்லிமும் வாசிக்க வேண்டும். தயவு செய்து இதற்கு உதவி செய்யுமாறு சமூக உணர்வாளர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஇந்த தலைமைத்துவத்தால் இந்த சமுதாயத்துக்கு செய்யப்பட்ட ஒரு நல்ல விடயத்தை கூறுங்கள் பார்க்கலாம்..? பெரிதாக ஒன்றுமே இல்லை, ஆனால் சமூகம் இழந்தவை ஏராளம், அதில் முக்கியமானது தான் நமது உரிமைக்குரல் சரியான நேரத்தில் ஒலிக்க வேண்டிய இடத்தில் ஒலிக்கவில்லை. முக்கியமாக பாராளு மன்றத்தில் ஒலிக்கவில்லை.
ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
ஈமானின் மிகவும் பலவீனமான நிலை ஒரு அநியாயத்தை சமூக துரோகத்தை மனதால் வெறுப்பது ஆகும்.
தயவு செய்து மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
இப்படிப்பட்ட மானம் கெட்ட அரசியல் செய்வதைவிட பிச்சை எடுத்து பிழைக்கலாம் பாருங்கோ
ReplyDeletewaail erukkum naakku appedium pesum kaaranam mullu illaithanay,
ReplyDeletesawuttu aanakke sangu oodura kada than edu.
He is non and null for Sri Lankan Muslim communities. Also there are some sundry men behind him from Est to get benfit. Very soon this has to come to an end.
ReplyDeleteஏன் இந்த அமைச்சரை தவிர மற்ற முஸ்லிம் அமைச்சர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளை முடிந்தால் அறியத்தரவும் பொதுவாக எல்லோரும் சுயநலமிகள் தான் .
ReplyDeleteAfter continous attack by SL racist elements on Sri Lankan Muslim's Religious places, traditional dress code, Food, economy and social status Rauf'mask is broken. His bootlickers Hafiz a man self decline owoner of SLMC head quaters, Hassan Ali, Tawam Kalmunai synthetic Mayors all has to stop robbing the votes of Musims for their Racist Masters. If Muslim community want to live with dignity.
ReplyDeleteஇவனுங்க இருந்தும் முஸ்லிம்களுக்கு இவ்வளவு நடக்கின்றது என்றால் இவனுங்களு வாக்கு போடுவதை நிறுத்திவிட்டு. தமிழனுக்காவது போட்டால் கொஞ்சமாவது நன்றியுணர்வுடன் நடப்பார்கள்.
ReplyDeleteஎன்னைப்பொறுத்தவரையில் முஸ்லிம்தலைவர்கள் என்று சொல்வதற்கு தற்போதைய நிலையில் காணவில்லை. மக்களே இனிமேல் நன்றாக யோசித்துத்தான் முடிவுசெய்யவேண்டும்.
You r exectly correct
Delete