Header Ads



கழுதையின் வேலையை கழுதை பார்க்கவேண்டும்..!

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரசை விமர்சிப்பதற்கான உரிமை மக்கள் கட்சித்தலைவர் முபாரக் மௌலவிக்கோ,அவரின் சிஸ்யன் அஸ்வர் பாகவிக்கோ இல்லை. வடபுல முஸ்லிம்களின் இன்பத்திலும் துன்பத்திலும் எம்மோடு களத்தில் நின்று போராடும்  அரசியல் தலைவரையும்,மக்களின் கட்சியையும் விமர்சிப்பதை வடபுல முஸ்லிம்கள் பொறுக்கமாட்டார்கள்.உங்களின் வேலையை நீங்கள் பார்த்த்தால் போதும்.

 ஒரு அரசன் ஒரு நாயையும்,ஒரு கழுதையையும் வளர்த்து வந்தான். கழுதைக்கோ அதிகம் வேலை.நாய்க்கோ பெரிதாக வேலை எதுவுமில்லை.இதையிட்டு கழுதைக்கு பொறாமை ஏறபட்டுவிட்டது. இதனால் நாயை சிக்கலில் மாட்டிவிடுவதற்காக ஒரு நாள் இரவு முழுதும் கழுதை தூங்காமல் விழித்திருந்தது.அன்றிரவு திருடன் வந்த சமயம் நாய் நல்ல தூக்கத்தில் இருந்தது.இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி அரசனிடம் நல்ல பெயர்பெற்று நெருங்குவதும்,நாய்க்குத் தண்டணை வாங்கிக்கொடுப்பதையும் நோக்காகக் கொண்டு கழுதை உரமாகக் கத்திக்கொண்டிருந்தது.இச்சத்தத்தை சகிக்க முடியாமல் எழும்பிவந்த அரசன் தனது சாட்டையால் கழுதைக்கு கடும் தண்டனை கொடுத்தான்.பின்னர் தான் கத்தியதற்கான காரணத்தை கழுதை கூறியது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த அரசன் கூறிய ஒரே பதில்....நாயின் வேலையை நாய் பார்க்க வேண்டும். கழுதையின் வேலையை கழுதை பார்க்க வேண்டும்.

இக்கதையின் உள்ளார்ந்த கருத்தை விளங்கிக்கொள்ளாமல் நடந்தால் கழுதைக்கு நடந்த கதைதான் நடக்கும்.

பெருநாள் சீசனில் உடுப்புக்கள் விற்க வருபவர்கள் போன்று அரசியல் செய்ய வடபுல மக்களிடம் வருபவர்கள் அல்ல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்காரர்கள். வடக்கு மக்களுக்கு எதுவெல்லாம் அவசரமாகத்தேவையோ அவற்றை இயன்றவரை செய்துவிட்டே இன்று களத்தில் குதித்துள்ளனர்.நன்றியுள்ள வடபுல முஸ்லிம்;கள் தமக்கு அதிகம் உதவுபவர்களின் பக்கமே என்றும் பலமாக நிற்பர்.மாற்றுக் கருத்துடையோர் தாம் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம்கள் தொடர்பான ஒப்படை ஒன்றை வழங்கியுள்ளோம். எமக்கு சிறந்த புள்ளிகிடைக்கும். ஆகவே நாம்தான் முஸ்லிம்களின் ஆபத்பாந்தவன் எனத்தம்பட்டம் அடிக்கின்றனர். ஒருவரும் ஒப்படை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மைபோலத்தோன்றுகிறது. எங்கே உங்கள் ஒப்படைகளை மக்கள் பார்வைக்கு இடுங்கள்.

3 comments:

  1. சார், இந்த கழுதை கதையை சொல்லாமல் இருந்திருந்தால் நான்றாக இருந்திருக்கும் ஏனெனில் கழுதை ஒரு உண்மை விடயத்தை முன்வைத்து கத்தியது என்பது புலனாகுகிறது.

    இந்த நாட்டில் உள்ள எவருக்கும் எந்த பகுதியிலும் அரசியல் பேசுவதற்கும் செய்வதற்கும் உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் திரு. கொட்டாப்புளி அவர்களே கழுதையின் வேலையைதான் கழுதை செய்யவேன்டும் அதை விடுத்து வக்காளத்து வாங்குற வெலை எல்லாம் பண்னபடாது.

    ReplyDelete
  3. kaluda kada, naaikada,allam solli pudumakkalai amatri waakkau halai
    peruwadu allam, awar awarudaya wasekkaaha wum sonda bank balance aahawum sollura NARIKKADA,,,,,, MAKKAL USARAAHIWITTARHAL.....

    ReplyDelete

Powered by Blogger.