வடக்கில் சிங்கள, முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேறவில்லை - தேர்தல் வேண்டாமென மனு
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு கோரி சிங்கள ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) செயலாளர் ஜயந்த லியனகே (10-09-2013) மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் வட மாகாண பிரதி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அளவிற்கு வடக்கு நிலை சுமூகமாக இல்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கில் முழுமையாக கண்ணிவெடி அகற்றப்படவில்லை, யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் யுத்தத்தின் பின் இன்னும் தங்கள் பிரதேசங்களில் மீள்குடியேறவில்லை. அதனால் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்துவது நியாயமானதல்ல என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே முதலில் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறும் அதன் பின்னர் தேர்தல் நடத்த முழு தடை விதிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment