Header Ads



பார்ட்டியில் தண்ணி அடித்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

ஒரு நாள் அல்ல.. 2 நாள் அல்ல.. 14 மாதமாக விடாத விக்கலால் ஒருவர் அவஸ்தை பட்டு வருகிறார். அயர்லாந்தில் வசித்து வருபவர் டேனியல் கிளவின் (37). கடந்த ஜூலை 2012ம் தேதி மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது. பார்ட்டியில் வழங்கப்பட்ட பீர் மற்றும் ஸ்பிரிட்டை கலந்து விதவிதமாக மது குடித்தார் டேனியல். அதன் பிறகுதான் டேனியலுக்கு வந்தது சோதனை.

பார்ட்டியில் திடீரென விக்கல் ஏற்பட்டது. அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நேரம் செல்ல செல்ல விக்கல் அதிகரித்தது. 7 நொடிக்கு ஒரு முறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தார் டேனியல். விக்கல் தொடர்ந்து வந்ததால், மூச்சு விடவும் முடியவில்லை. பிரச்னை பெரிதானதால் பார்ட்டியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடித்தார். பரிசோதனை செய்த டாக்டர் வழக்கம் போல் மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பினார்.

அதன்பின் விக்கல் நின்று விடும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் நிற்காமல் தொடர்ந்தது. மீண்டும் 7 நொடிக்கு ஒரு முறை விக்கல். மூச்சு விட முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. மனிதர் படாத பாடு படுகிறார். ஜாம்பவான் டாக்டர்களை எல்லாம் பார்த்து விட்டார். இது சின்க்ரோனஸ் டயாப்ராக்மாடிக் ஃப்ளட்டர் என்று வாயில் நுழையாத நோய் பெயரை சொல்லி அனுப்பி விட்டனர்.

விக்கல் நீடிப்பதால் மனைவியின் தூக்கம் பாதிக்காமல் இருக்க வேறு அறையில்தான் இரவை கழிக்கிறார் டேனியல். எண்டோஸ்கோபி, சி.டி ஸ்கேன் என எத்தனை பரிசோதனை இருக்கிறதோ... அத்தனையும் பார்த்தாகி விட்டது. தீர்வுதான் கிடைக்கவில்லை. உணவு முறையிலும் மாற்றம் செய்து பார்த்தார்கள். மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் என மனநல சிகிச்சையும் அளித்தனர். இவருக்கு வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் தசையிலும் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கடந்த 14 மாதமாக விக்கலில் தவித்து வருகிறார் மனிதர். இதுவரை 53 லட்சத்துக்கு மேற்பட்ட முறை டேனியலுக்கு விக்கல் வந்திருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.

No comments

Powered by Blogger.