சிரியா மீது தாக்குதல் தாமதமாகலாம்..! அனுமதிக்காக காத்திருக்கும் ஒபாமா..!!
சிரியா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.
சிரியா நாட்டில், அதிபர் பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்துவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.இதனால் சிரியாவில், தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரசாயன ஆயுதம்:சிரியா நாட்டுக்கு ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்றன. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை.கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மற்ற நாடுகளின் ஆதரவை, ஒபாமா திரட்டி வருகிறார்.""சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில், இந்த கவுன்சில், முற்றிலும் செயலிழந்துவிட்டது. அதனுடைய ஒப்புதலை பெறாமல், சிரியா மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்,'' என, அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலுக்கு, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆதரவளித்து உள்ளன.
ஆதாரம் உள்ளது:சிரியாவில், ரசாயன குண்டுகளை வீசி, விஷ வாயுவை பரவவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.
"சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார் அதிபர் ஒபாமா. ஒபாமாவின் இந்த நடவடிக்கை, சிரியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையிலிருந்து பின்வாங்குவதாக உள்ளது' என, சிரியா பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.
ஆனால் இந்த கருத்தை, அமைச்சர் ஜான் கெர்ரி மறுத்துள்ளார். ""சிரியா விஷயத்தில், அமெரிக்க அரசு சுதந்திரமாக செயல்படுவதற்காக தான், இந்த நடவடிக்கையை ஒபாமா எடுத்துள்ளார்,'' என, ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.சிரியாவில் போர் மேகம் சூழ்ந்து வருவது குறித்து, அரபு நாடுகள் நேற்று கூடி விவாதித்தன. எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகள், "தாக்குதலுக்கு பதில், பேச்சு வார்த்தையின் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்' என, வற்புறுத்தின.

Post a Comment