Header Ads



முஸாபர் நகரில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முழக்கமிட்டு நடத்திய இனப்படுகொலை

“குஜராத் மேம் ட்ரெய்லர் தா; யு.பி. மேம் சினிமா ஹே” (குஜராத்தில் கண்டது ட்ரெய்லர்தான்; உ.பி.யில் காணப்போவது சினிமா) என்ற முழக்கமிட்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள புகானா கிராமத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.

பிறந்து எட்டு மாதமே ஆன 3 பிஞ்சுக் குழந்தைகளை தீயிலிட்டு மிருகவெறி கொண்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பொசுக்கியதாக ஜோகியா கேடா அகதிகள் முகாமில் தங்கியுள்ள நஸீம் கூறுகிறார்.

ஆதாரங்களை அழிப்பதற்கு சாம்பலை குளத்தில் கரைத்தனர். குடும்பத்தினரின் முன்பாக 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 69 பேர் இக்கிராமத்தில் இருந்து காணாமல் போயுள்ளனர். இம்மாதம் ஏழாம் தேதி வி.ஹெச்.பி. அழைப்பு விடுத்த மஹாபஞ்சாயத்து கூட்டத்திற்குப் பிறகு வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

தாக்குதல்கள் நடக்கப் போகிறது என்ற செய்தி பரவியதால் கிராமவாசிகள் பீதியில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், அங்கு வந்த போலீஸ் மற்றும் கிராமத் தலைவர் அவர்களை ஆறுதல் படுத்தினர். ஆகையால் யாரும் கிராமத்தில் இருந்து வெளியேறவில்லை.

போலீஸ் சென்ற பிறகு சில மணி நேரங்கள் கழித்து வன்முறையாளர்கள் கிராமத்திற்குள் நுழைந்தனர். 10 மற்றும் 15 பேர் அடங்கிய ஏராளமான கும்பல்கள் கைகளில் துப்பாக்கி, வாள், கோடாரிகளுடன் வந்திருந்தனர்.

“இவர்களின் தாடியைப் பிடுங்குங்கள்! பாகிஸ்தான் அல்லது கப்றுஸ்தான்!” போன்ற முழக்கங்களை வன்முறையாளர்கள் எழுப்பினர். பின்னர் துப்பாக்கியால் சுடத் துவங்கியுள்ளனர். பீதியடைந்த கிராமவாசிகள் போலீசுக்கு போன் செய்துள்ளனர். ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை. ஜாட் இனத்தைச் சார்ந்த சிலர் வன்முறையாளர்களை திரும்பிச் செல்லுமாறு கூறியபோது வன்முறையாளர்கள் அவர்களை அச்சுறுத்தினர்.

பின்னர் இஸ்லாம் என்ற நபரை அவரது வீட்டிற்குள் நுழைந்து சுட்டுக் கொலை செய்தனர். அக்கம் பக்கத்து வீடுகளிலும் சிலர் கொல்லப்பட்டனர். நஸீமின் வீட்டை வன்முறையாளர்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி தகர்த்துள்ளனர். அதைப் போல 200 வீடுகள் மற்றும் 2 மஸ்ஜிதுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற மஹாபஞ்சாயத்தின் அழைப்புக்குப் பிறகு அனைத்து கிராமங்களிலும் ஜாட் இன வெறியர்கள் முஸ்லிம்களை அழிக்க சதித் திட்டம் தீட்டினர் என்று அகதிகள் கூறுகின்றனர்.
தனது கிராமத்தில் மட்டும் முதல் நாள் 15 பேர் கொல்லப்பட்டதாக புதானாவில் உள்ள ஜாமிஆ மில்லியா சாந்தேடியா மதரஸாவில் அகதியாக தங்கியுள்ள குதுபா கிராமத்தைச் சார்ந்த ஹினா கூறுகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மதரஸாவில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

குதுபா கிராமத்தில் 2 மஸ்ஜிதுகள் தகர்க்கப்பட்டுள்ளன. “முஸ்லிம்களையெல்லாம் கொன்றொழிக்க வேண்டும்” என்று வன்முறையாளர்கள் முழக்கமிட்டதாக ஹினா கூறுகிறார்.

வீட்டின் முன் பகுதியில் காலையில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த தன் தந்தையை எட்டாம் தேதி காலை 10.30 மணியளவில் வன்முறையாளர்கள் கோடாரியால் வெட்டிக் கொலை செய்தனர் என்று கரட் கிராமத்தைச் சார்ந்த பஹர்பன் மர்ஹ்முன்னா கூறுகிறார்.

வீட்டில் இருந்து தப்பியோடி முன்னாள் கிராமத் தலைவர் ஜிதேந்திர சிங்கின் வீட்டில் இவர் அபயம் தேடியுள்ளார். 150க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஜிதேந்திர சிங் அபயம் அளித்துள்ளார்.

முஹம்மது பூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் முஸ்லிம்கள் ஒருவரும் இல்லை. குழந்தைகள் உள்பட ஏராளமானோர் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளை ஜாட் இனத்தவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சுல்தாபூரில் அகதிகளாக தங்கியுள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர். (Thoo)

No comments

Powered by Blogger.