Header Ads



துருக்கி, துனீஷியா, ஹமாஸ் அரசுகளை கவிழ்க்க முயற்சி - இஸ்ரேல் + அரபுநாடுகள் சதி

(Tn) காசாவில் ஹமாஸ் அரசை கவிழ்க்க, எகிப்தை பின் பற்றி அமைக்கப்பட்டிருக்கும் தமரூத் என்ற அமைப்பின் பின்னணியில் இஸ்ரேல் செயற்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் உறுதிப்பினர் ஒருவரது வாக்கு மூலத்தை ஹமாஸ் நிர்வாகம் வெளியிட் டுள்ளது.

எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியின் இஸ்லாமியவாத அரசை கவிழ்க்க பிரசாரம் செய்த தமரூத் என்ற அமைப்பை பின்பற்றி பலஸ்தீனின் காசாவிலும் ஹமாஸ் அரசை வீழ்த்த குறித்த பெயரில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்புடன் தொடர் புடைய பலரை பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்கு மூலத்தில் தமரூத் சதியின் பின்னணியில் இஸ்ரேல், ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன நிர்வாகம், ஒரு சில அரபு நாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் குறித்த அரபு நாடுகளின் விபரத்தை அந்த நபர் வெளியிடவில்லை. தமரூத் சதி மூலம் காசாவில் மீண்டும் பத்தா அரசை நிறுவி அதன் முன்னணி உறுப்பினரான முஹம்மத் தஹ்லானை அங்கு ஜனாதிபதியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை தஹ்லான் மறுத்துள்ளார்.

குறித்த நபரின் வாக்கு மூலத்தின்படி எதிர்வரும் ஆறு மாதத்திற்குள் காசாவில் ஹமாஸ் அரசை கவிழ்க்க திட்டமிப்பட்டுள்ளது. குறித்த நபர் மேற்குக் கரையில் பலஸ்தீன நிர்வாகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சதிமுயற்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

“தெற்கு காசாவில் ஒரு குழுவை நிறுவ அவர்கள் அறிவுறுத்தினார் கள். வடக்கு காசாவில் போதுமான ஆயுதங்களுடன் ஹமாஸ் அரசை முடிவுக்கு கொண்டுவர தமது குழு காத்திருப்பதாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அத்துடன் தம்மிடம் அதிக பணம் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்” என்று குறித்த நபரின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எகிப்தின் தமரூத் அமைப்பு துனீஷியாவின் இஸ்லாயிவாத அரசை கவிழ்க்க அங்கு நிறுவப்பட்டிருப்பதோடு துருக்கியிலும் அந்த அமைப்பை நிறுவ திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.