Header Ads



துஆ என்னும் பிரார்த்தனை

(அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) கிழக்குப் பல்கலைக்கழகம்)
 
பிரார்த்தனையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் பிரஸ்தாபிக்கும் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் குறிப்புக்கள் ஏராளமாக கிடைக்கின்றன.

‘என்னை அழையுங்கள்! நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்! எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ! அவர்கள் இழிவடைந்த நிலையில் நரகத்தில் நுழைவார்கள்‘ (40 60)

நபி (ஸல்) கூறினார்கள் ‘பிரார்த்தனையே வணக்கமாகும். (திர்மதி)

பிரார்த்தனையின் போது கடைபிடிக்க வேண்டியவை
1. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களைச் சொல்லி பிரார்த்தனை புரிய வேண்டும்.
அல்லாஹ்வுக்கு அழகிய திரு நாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனிடம் பிரார்த்தியுங்கள். (07-80)
2. ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பின்னர் தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். (திர்மிதி)
3. தூய எண்ணத்துடன் பிரார்த்தனை புரிய வேண்டும்.
4. தமது வார்த்தைகளை பொருள் விளங்கி பயபக்தியுடன் கேட்க வேண்டும்.
நபி (ஸல்) கூறினார்கள் ‘பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதி கொண்டவராக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அலட்சியமாகவும் பராமுகமாகவும் உள்ள உள்ளத்திலிருந்து வரும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (புஹாரி)
5. மார்க்கம் அனுமதிக்கும் நல்ல நோக்கங்களுக்காகவே பிரார்த்தனை புரிய வேண்டும்
நபி (ஸல்) கூறினார்கள் ‘உறவுகள் முறிந்து போகுதல் பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தல் போன்ற தீய நோக்கங்களுக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடாது. (முஸ்லிம்)
6. பிரார்த்தனை புரியும் போது கைகளை உயர்த்தி இரு உள்ளங்களையும் முகத்தின் பக்கம் ஆக்கிக்கொள்ள வேண்டும். (திர்மதி)
7. பிரார்த்தனை ஏற்கப்பட ஹலாலான வருமானத்திலிருந்து உண்ணுவதும் உடுப்பதும் அவசியமாகும். (முஸ்லிம்)
8. அல்லாஹ்வுக்காக தான் செய்த சிறந்த செயல்களை சொல்லி அதன் பொருட்டால் அல்லாஹ்விடம் தம் தேவைகளைக் கேட்க வேண்டும். (புஹாரி)
9. மிக்க தாழ்மையுடனும் பணிவுடனும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். (அல்-குர்ஆன்)
10. எந்தவொரு படைப்பினத்தையோ அல்லது மனிதரையோ பொருட்டாக வைத்துப் பிரார்த்தனை செய்யக்கூடாது.
எவருடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்?
1. பெற்றோர் தமது பிள்ளைகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை (திர்மதி)
2. நோயாளியின் பிரார்த்தனை
3. அநியாயம் செய்யப்பட்டோரின் பிரார்த்தனை
4. நீதம் மிக்க தலைவரின் பிரார்த்தனை
5. பிரயாணியின் பிரார்த்தனை
பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்பான நேரங்கள்
1. இரவின் கடைசிப் பகுதி. (புஹாரி)
2. அதானுக்கும் இகாமதுக்கும் இடையிலுள்ள நேரம். (அபூதாவூத்)
3. கடமையான தொழுகைகளுக்குப் பின்னுள்ள நேரம். (திர்மிதி)
4. நோன்பு திறக்கும் நேரம். (முஸ்லிம்)
5. லைலதுல் கத்ர் இரவு. (திர்மதி)

No comments

Powered by Blogger.