வீரவசனம் பேசி வாக்குக் கேட்பது காத்திரமானதல்ல - ரவூப் ஹகீம்
(jm.Hafeez)
உணர்ச்சி ததும்பும் வசனங்களைவிட எந்நேரத்தில் எது செய்ய வேண்டுமோ அதனை மேற்கொள்ளும் பக்குவம் எம்மில் வளரவேண்டும். இலங்கையிலுள்ள சக்தி மிக்க ஒரு அமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனைச் செய்து வருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லீம்காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹகீம் தெரிவித்ததார்.
(8.9.2013) கண்டி ஸ்ரீபஸ்பதான மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். சமாதான நீதவான்களுக்கு நியமனக் கடிதம் கையளிக்கும் முகமாக சிங்கள மக்காள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று எட்டுப் பாராளுமன்ற அங்கத்தவர்களையும் 40 ற்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபை அங்கத்தவர்களையும் ஐந்து உள்ளுராட்சி அமைப்புக்களின் தலைவர்களையும் தன்னகத்தே கொண்டது மட்டுமல்லாது பல இலட்ச மக்களின் வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அமைப்பாகும். எனவே எமது அமைப்பை எவரும் வெறும் கிள்ளுக் கீரையாக எடைபோட முடியாது.
நான் எதிர்கட்சியிலும் இருந்துள்ளேன் அரசின் அங்கத்தவனாகவும் இருந்துள்ளேன். சுயாதீன முடிவெடுக்கக் கூடிய ஆனால் அரசின் பங்காளியாகவும் இருந்துள்ளேன். இவை அனைத்திலும் ஒரே விதமாக என்னால் பேச அல்லது நடந்து கொள்ள முடியாது. எதிர் கட்சியில் இருந்த போது பேசிய பேச்சுக்களை அமைச்சரவையில் அங்கத்தவனாக இருந்து கோண்டு பேச முடியாது. எனவே அவ்வப் போது செய்ய வேண்டியவற்றை நான் செய்து தான் இருக்கிறேன்.
உணர்சி வசப்பட்டு கடும் வார்த்தைகளைப் பேசி மக்களை மகிழ்விக்க முடியும். அப்படி பேசித் தீர்பதை விட சந்தர்ப்ப சூழ் நிலைகளை அனுசரித்து அதற்கேற்ப பேசுவதுதான் புத்திசாதுர்யம். எனவே வீரவசனம் பேசி வாக்குக் கேட்க முடியும். அது காத்திரமானதாகாது. கடந்த 23 முதல் 25 வருட அனுபவத்தை எடுத்துப் பார்க்கும் போது மாகாண சபை முறையில் பல்வேறு விடயங்களைக் கற்றுக் கொண்டோம். மாகாண சபை முறை எமக்கு பயன் மிக்க ஒரு முறை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆனால் அதிற்காணப்பட்ட சில குறைபாடுகளை காலத்திற்குக் காலம் திருத்தங்கள் மூலம் நிவர்த்தி செய்துள்ளோம்.
அண்மையில் அப்படியான ஒரு திருத்தம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்ட போது நான் அதனைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அது கைவிடப்பட்டது. இப்படியாக எது தேவையோ அதை அந்நேரம் பார்த்து செய்யும் ஒரு பக்குவம் எமக்குத் தேவை.
இன்று சில அரசியல் சக்திகள் எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து வருகிறது. அப்டி நாம் எதிர் மறையாக எதனையும் செய்தவர்கள் அல்ல. ஆனால் அண்மித்த காலப் பகுதியில் அரசு சில நெருக்கடிகளை சந்தித்தது. அப்படியான நேரங்களில் அதற்கு உதவுவது ஒரு புறம் கூட்டுப் பொறுப்பு மறுபுரமாக நாம் நடந்து கொள்ளவேண்டி உள்ளதே தவிர விமர்சிக்கும் கோணம் தவறானது.
யுத்தம முடிந்த உடன் வடக்கில் தேர்தல் தொடர்பான அழுத்தங்கள் வந்தன். சில நேரங்களில் அதனைப் பின் போடுவது சிறந்ததாக இருந்தது.அப்படியான நேரத்தில் நாம் அதனையும் ஆதரித்தோம். தற்போது தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்திய மாகாணத்தில் இன்னும் சில காலம் தாமதித்து தேர்தல் நடத்தும் கால அவகாசம் உள்ளது. இருப்பினும் அரசின் இன்றைய நெருக்கடி காரணமாக ஒரு தேர்தலை நடத்திக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. இப்படியான நிலைமைகளில் நெகிழ்வு தேவை.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யட்டிநுவர பிரதேச சபைக்கு ஒரு சிங்கள்ப பெண் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தெரிவானார். இம்முறை அவர் மாகாண சபைக்கும் போட்டி இடுகின்றார். இப்டியானவர்கள் வெற்றி பெறுவதன் மூலம் எமது கட்சி பற்றி தப்பான பிரசாரத்திற்கு இடமில்லை என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஒரு சிலருக்கு சமாதான நீதவான் நியமனக் கடிதங்களையும் கையளித்தார்.
Post a Comment