Header Ads



புத்தளம் - மன்னார் வீதி கார்பட் வீதியாகப் புனரமைக்கப்படுறது

புத்தளம் மன்னார் வீதி கார்பட் வீதியாகப் புனரமைக்கப்படுகிறது. இதனை மாகா நிறுவனம் செய்கின்றது. இலவங்குளத்தில் இருந்து புத்தளம் செல்லும் வரையான வீதி ஒடுங்கியதாகவும்,குண்டும் குழியும் நிறைந்ததாகவும் காணப்பட்டது.இதனால் பயணிகளும், வாகனச்சொந்தக் காரர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இவ்வீதி சிறப்பாகப் புரனரமைக்கப் பட்டு முடிவடைந்தால் புத்தள மாவட்ட மக்களும்,வடமாகாண மக்களும் பெரும் நன்மை அடைவர்.

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிலாவத்துறை மறிச்சுக்கட்டி வீதி மாகா,மெகா ஆகிய நிறுவனங்களால் கார்பட் வீதிகளாகப் புனரமைக்கப்படுகின்றன.பாலங்கள்  சிறப்பாக அமைக்கப்படுகின்றன. இவ்வீதியில் கொக்;குப்படையான் சந்தி தொடக்கம் இலவங்குளம் வரை வெறும் மணல்ப்பாதையாகவே அமைந்திருந்தது. கடந்த பல தசாப்தங்களாக புழுதித் தொல்லைகளால் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை.இவ்வீதி சிறப்பாக அமைக்கப்படுவதால் விஷேடமாக கரடிக்குழி.பாலைக்குழி, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம்,காயக்குழி,கொண்டச்சி போன்ற கிராம மக்களும்,மன்னார் மாவட்ட மக்களும் பெரும் நன்மை அடைவர்.இவர்கட்கு போக்குவரத்துச் செலவு குறைவாக அமையவும்,நேரவிரயம் குறைவடையவும் வாய்ப்புள்ளது.

புத்தளம் மன்னார் வீதி சிறப்பாக புரனமைக்கப்படுவதை இட்டு வடமாகாண முஸ்லிம்கள் ஜனாதி பதிக்கும், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக்இற்கும் தமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். வாழ்நாள் பூறாகவும் தார் வீதிகளை காணாத மக்களுக்கு இவ்வரசே தார் வீதிகளை பரிசாக வழங்கியுள்ளது என்றாள் மிகையில்லை. ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் வீதி வலையமைப்பு மிகவும் முக்கியமானது.

2 comments:

  1. வீதி வரும் முன்னே காணி பறிபோகும் பின்னே . ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றதே ஏமாற்றதே .

    ReplyDelete
  2. All election campaign whoop's who say Mannar people not to be seen in life carpet road there are living in the jungle? There are not to doing own money all coming from foreign

    ReplyDelete

Powered by Blogger.