Header Ads



சிரியாவுக்கு அருகே படை பலத்தை பெருக்கும் ரஷியா


அமெரிக்க படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிரியா ரசாயன தாக்குதல் நடத்துவது உறுதி செய்யப்பட்டு ஐ.நா.சபை ஒப்புதல் அளித்தால் மட்டுமே சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று ரஷியா கூறிவருகிறது.

 இதற்கிடையே ரஷியா திடீரென தனது கப்பல் படையை சிரியா அருகே நகர்த்தி வருகிறது. மத்திய தரை கடல் பகுதியில் ரஷியாவின் போர் கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ரஷியாவின் அதி நவீன போர் கப்பலான மோஸ்குவா ஜிப்ரால்டர் ஜெலசந்தி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கப்பல் தற்போது மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 10-நாளில் சிரியா அருகே வந்தடையும். ரஷியா திடீரென கப்பல் படைகளை மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்புவது, அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்துள்ளது. ஏற்கனவே சிரியாவுக்கு ரஷியா ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகிறது. ஒருவேளை அமெரிக்கா,சிரியாவை தாக்கினால் சிரியாவுடன் சேர்ந்து ரஷியா எதிர்தாக்குதல் நடத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

No comments

Powered by Blogger.