கல்முனை மாநகர சபையின் கவனத்திற்கு..! (படங்கள்)
படத்தில் காட்டப்படுவது சாய்ந்தமருது - 06 மாவடி வீதியில் உள்ள குப்பைகளாகும். இரண்டு மையவாடிக்கு இடைப்பட்ட வீதியில் தான் குப்பை காணப்படுகின்றது. இதன் முன்பாக அல்- ஜலால் வித்தியாலயம் பாடசாலையும் அருகில் சாய்ந்தமருது- 06 ம் குறிச்சிக்குறிய கிராமசேவகர் அலுவலகமும் அமைந்துள்ளது.
முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இதன் அருகில் சுகாதார பணிமனை ஒன்றும் உள்ளது (MOH) Office இந்த வீதியால் வரும் பாடசாலை மாணவர்களும், தாய்மார்களும் இதில் இருந்து வரும் துர் நாற்றத்தின் காரணமாக பெரும் சுகாதார சீர் கேட்டிற்கும் உள்ளாவதாக குறிப்பிடுகின்றனர்.
இதற்கு கல்முனை மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்கவேணடும் என்றும், இந்தவிடயத்தை கருத்திற் கொன்டு குப்பைகளை போடுவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை சேகரிப்பதற்குறிய வழிவகைகளையும் மாநகர சபை எடுக்குமேன எதிர்பார்க்கின்றோம்.
Post a Comment