Header Ads



புத்தளம், மன்னார் வீதியில் பேரீச்சை மரம் காய்த்துக் கனிந்து காட்சி தருகிறது (படங்கள்)


(கே.சி.எம்.அஸ்ஹர்)

புத்தளம், மன்னார் வீதியில் அமைந்துள்ள இலவங்குளம், எனும் முஸ்லிம் கிராமப்பள்ளி வாயலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் வளவில் மூன்று பேரீட்சை மரங்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் காய்க்கச் செய்வதற்கான எவ்வித விஷேட நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இம்மரங்களில் ஒன்று சிறப்பாக வருடாவருடம் காய்த்து வருவதை அவதானிக்க முடிகின்றது. மகரந்தச்சேர்க்கைகள் செய்யப்பட்டால் அனைத்தும்  காய்க்கும்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களின் முயற்சியால் பிரதான வீதியின் மத்தியில் பல பேரீட்சை மரங்கள் நடப்பட்டுள்ளன. விஷேட பராமரிப்பினாலும், காலநிலைப் பொருத்தப்பாட்டினாலும் அனைத்து மரங்களும் காய்த்துள்ளன. இம்மரக்கனிகளை பல அமைச்சர்கள் தமது கரங்களாலேயே பறித்துச்சுவைத்துள்ளனர். உண்மையில் ஒரு வித்தியாசமான அனுபவமேயாகும். உல்லாசப் பயணிகளும் இதனைப்பார்வையிட்டுச் செல்கின்றனர். அரபு நாடுகளுக்குச் சென்று பெறவேண்டிய இவ்வனுபவங்களை எமது மண்ணில் பெறக்கிடைப்பது ஒரு வரப்பிரசாதமேயாகும்.

ஈச்சமரங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முஸ்லிம் கிராமங்களில் முளைக்கும் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளிவாயல் அமைந்துள்ள வளவில் ஈச்சமரங்கள் வளர்க்கப்படவேண்டும். சில பள்ளிவாயல் வளவுகளில் அம்மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.

குறிப்பாக வடமாகாணத்தின் காலநிலையும், மண்ணும் இம்மரச்செய்கைக்குப் பொருத்தமானது.இப்பிரதேச மக்கள் இதனைப்பயிரிட முயற்சி செய்யவேண்டும். பாரிய அரச ஈச்சமரத் தோட்டங்களையும் உருவாக்கலாம்.


No comments

Powered by Blogger.