Header Ads



வட மாகாணசபைத் தேர்தலை வெளிநாட்டுத் தூதரகங்களும் நேரடியாக கண்காணிக்க முடிவு

வடக்கு மாகாணசபைத் தேர்தலை பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களும் நேரடியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளன.  இதற்காக எட்டு நாடுகளின் தூதுவர்கள், மற்றும் தூதரக அதிகாரிகள் வடக்குப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அவுஸ்ரேலியா, நோர்வே, கனடா, ஜப்பான், இந்தியா, சுவிற்சர்லாந்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளே, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நேரடியாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க சார்க், மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும், வெளிநாட்டுத் தூதரகங்களும் கண்காணிப்பை நேரடியாக மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.