Header Ads



வட மாகாணசபை வாடகை கட்டடத்திலேயே இயங்கும்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் மூலம் வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு மாகாணசபைக்கான கட்டடங்கள் எதுவும் கிடையாது. இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டு 28 ஆண்டுகளின் பின்னர், வடக்கில் மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், அமர்வுகளை நடாத்தவும் ஏனைய பணிகளை மேற்கொள்ளவும் இதுவரையில் கட்டடங்கள் எதுவும் ஒழுங்கு செய்யப்படவில்லை.

வட மாகாணசபைக்கு நிரந்தர கட்டடம் எதுவும் கிடையாத காரணத்தினால், வாடகை அடிப்படையில் கட்டடமொன்றை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

உரிய கட்டடமொன்றை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் இந்த கட்ட்டம் அமைக்கப்பட உள்ளது.

வடக்கு மாகாணசபைக்கு நிரந்தர கட்டம் ஒன்றை அமைப்பது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.