"அரபா நோன்பு, அரபா தினத்தில் மறுநாள் ஹஜ்ஜுப் பெருநாள்"
T.M நிலாம் இஸ்லாஹி M.A.
நபி (ஸல்) அவர்கள் அரபா நோன்பை பிறை 09 ல் நோற்குமாறு எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அரபா தினத்தில் அதை நோற்குமாறே குறிப்பிட்டார்கள். அரபா தினம் முழு உலகுக்கும் ஒன்று என்ற வகையில் முஸ்லிம்கள் அத்தினத்தில் நோன்பு நோற்றாலே அது அரபா நோன்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அரபா நோன்பு பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் அரபா தின நோன்பு – ஸெளமு யவ்மி அரபா என்றே இடம் பெற்றுள்ளது. பிறை 09 என எங்கும் இடம் பெறவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.
(சிரே.விரிவுரையாளர், இஸ்லாஹிய்யாஹ் அரபுக் கல்லூரி, மாதம்பை)
முழு உலகுக்கும் ஹஜ் ஒன்றுதான். அது மேற் கொள்ளப்படுவது ஓர் இடத்திலாகும். அதன் ஆரம்பம், முடிவு பற்றி எவ்வித சர்ச்சைகளும் இல்லை. துல்ஹஜ் மாதம் பிறை 08 ல் அது துவங்குகிறது. துல்ஹஜ் மாத தலைப் பிறையையும் ஹஜ்ஜையும் ஸஊதி அறேபிய அரசே தீர்மானிக்கிறது. பிறை 09 அரபா தினமாகும். பிறை 10 அறுப்புக்குறிய (யவ்முன் நஹ்ர்) தினமாகும். இவற்றில் உலக முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுபடுவதில்லை. எல்லா நாடுகளைச் சேர்ந்தவர்களும் எல்லா இயக்கத்தவரும் ஹஜ் விடயத்தில் ஸஊதி அரசின் தீர்மானத்தையே ஏற்றுக் கொள்வதை அவதானிக்கலாம். இஸ்லாத்திற்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை அது இவ்வாறுதான் நிரைவேற்றப்படுகிறது.
பிறை 09 அரபா தினமாகும். ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஒன்று கூடி அரபா உரையை செவிமடுக்கும் தினமே அரபா தினமாகும். ஹஜ் கடமையை நிறைவேற்றாதவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அனைவருக்கும் அரபா தினம் அதுவேயாகும். உலக முஸ்லிம்கள் அரபா நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் பார்த்தும் கேட்டும் வருகின்றனர். இதனை மூடி மறைக்க இயலாது. ஓவ்வொரு நாட்டிலும் அரபா தினம் வருவதற்கு முடியாது. சிறிதளவு அறிவுள்ளவர்களுக்கும் இது இலகுவாகப் புரியும்.
நபி (ஸல்) அவர்கள் அரபா நோன்பை பிறை 09 ல் நோற்குமாறு எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அரபா தினத்தில் அதை நோற்குமாறே குறிப்பிட்டார்கள். அரபா தினம் முழு உலகுக்கும் ஒன்று என்ற வகையில் முஸ்லிம்கள் அத்தினத்தில் நோன்பு நோற்றாலே அது அரபா நோன்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அரபா நோன்பு பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் அரபா தின நோன்பு – ஸெளமு யவ்மி அரபா என்றே இடம் பெற்றுள்ளது. பிறை 09 என எங்கும் இடம் பெறவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.
அரபாத்தில் தங்கும் ஹாஜிகள் அரபா தின நோன்பு நோற்க மாட்டார்கள். அன்று அவர்களுக்குப் பெருநாளாகும். நபி (ஸல்) அவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்க வில்லை. அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: 'அரபா நாள் (யவ்மு அரபா), அறுப்புக்குறிய நாள் (யவ்முந் நஹ்ர்), அதைத் தொடர்ந்து வரும் மூன்று தினங்கள் (அய்யாமுத் தஸ்ரீக); என்பன முஸ்லிம்களாகிய எமது பெருநாளாகும். அவை சாப்பிடுவதற்கும் குடிப்பதுக்குமான நாட்களாகும்.' இது ஓர் உறுதியான ஹதீஸாகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னாவாகும். நபி (ஸல் ) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.: 'அரபா தின நோன்பு (ஸெளமு யவ்மி அரபா) அதற்கு முன்னைய, பின்னைய இரு வருடங்களுக்குறிய குற்றப்பரிகாரமாகும்.' (முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா...)
இந்த ஹதீஸ் அரபா தினத்தில் நோன்பு நோற்பதையே வழியுறுத்துகிறது. இமாம் அத்திர்மிதீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 'அரபாவுக்கு வெளியில் இருப்பவர்கள் அரபா தினத்தில் நோன்பு நோற்பதை இஸ்லாமிய அறிஞர்கள் முஸ்தஹப் எனக் குறிப்பிடுவர்.'
பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள். பிறையைக் கண்டு ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் ஈதுல்பிர் விடயத்தில் குறிப்பிட்டது போல அனைவரும் பிறையைக் கண்டு ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுங்கள் எனக் குறிப்பிடவில்லை. ஏனெனில் அதனைத் தீர்மானிக்க உலகிலுள்ள அனைவரும் பிறைபார்க்க அவசியமில்லை என்பதை அது உணர்த்துகிறது. ரமழானில் நோன்பு நோற்பது உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும். அது எல்லா நாடுகளுடனும் தொடர்பான கடமையாகும். ஹஜ் என்பது உலகில் மக்கா நகரில் மாத்திரம் நடைபெறும் கடமையாகும்.
எனவே ரமழானையும் ஸவ்வாலையும் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் முஸ்லிம் தலைமைகள் தீர்மானிப்பதே பொறுத்தமானது. ஹஜ்ஜைப் பொறுத்தளவில் ஸஊதி அரேபிய அரசு தீர்மானிப்பதே பொறுத்தமானது. அதனை அடிப்படையாகக் கொண்டு அரபா நோன்பு நோற்பதும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதும் அய்யாமுத் தஸ்ரீக் தினங்களுக்குறிய ஹதீ, தக்பீர் போன்றவற்றை மேற்கொள்வதும் அவசியமாகும். அந்த வகையில், துல்ஹஜ் பிறை 10 லும் அய்யாமுத் தஸ்ரீக் தினங்களான பிறை 11, 12, 13 அஸர் வரையிலும் உழ்ஹிய்யா நிறைவேற்றுவதும் தக்பீர் கூறுவதும் சுன்னாவாகும். அக்குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னரோ பின்னரோ உழ்ஹிய்யா நிரைவேற்ற முடியாது. அய்யாமுத் தஸ்ரீக் ஒவ்வொரு நாட்டிற்குமுறியதல்ல. மக்காவில் எத்தினங்கள் அய்யாமுத் தஸ்ரீக் தினங்களாக தீர்மானிக்கப் பட்டுள்ளதோ அத்தினங்களே உலக முஸ்லிம்களின் அய்யாமுத் தஸ்ரீக் தினங்களாகும்.
சுறுக்கமாகக் கூறுவதாயின், துல்ஹஜ் பிறைகள் குறிப்பாக 09,10, 11,12.13 என்பன ஹாஜிகளுடனும் பிற முஸ்லிம்களுடனும் தொடர்பான தினங்களாகும். ஹாஜிகள் அரபாவில் தரிக்கும் நாளில் பிற முஸ்லிம்கள் அரபா நோன்பு நோற்பார்கள். ஹாஜிகள் பிறை 10, 11, 12, 13 ஆம் தினங்களில் தமது ஹதீகளையும் இதர கிரிகைகளையும் நிறைவேற்றும் போது பிற முஸ்லிம்கள் உழ்ஹிய்யா நிறைவேற்ற வேண்டும். இக்காரியங்கள் முழுக்க முழுக்க ஹஜ்ஜுடன் தொடர்புபட்டதால் அவை குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னரோ பின்னரோ நிறைவேற்றப்பட முடியாது. இங்குதான் சர்வதேச ஐக்கியம் வலியுருத்தப்படுகிறது.
முழு உலகுக்குமே ஹஜ்ஜுடைய பிறையும் பெருனாளும் ஒன்றாக இருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் ஓரிரு நாட்கள் பின்னோக்கியும் இலங்கை ஹஜ்ஜுப்பிறையை தீர்மானிக்கும் சக்தியாக இன்னுமும் அகில இலங்கை உலமா சபையே இருப்பதற்கு என்ன காரணம்?
ReplyDeleteமேலும், ரமழான்,ஷவ்வால் பிறைகளை மட்டும் உல் நாட்டு தலைமைகள் தீர்மாணிக்கவேண்டும் ஹஜ்ஜு மட்டும் சவூதி தீர்மானிக்க வேண்டும்? இது எப்படி சட்டம்? ரசூலுல்லாஹ் சொன்ன ஹதீஸை மீன்டும் ஹஜ்ஜுக்கும் தனியாக சொல்ல வேண்டுமா?இல்லவே இல்லை. நீங்கள் எல்லாம் எப்படி ஹஜ்ஜு பிறையை உலகம் முழுவதற்குமாக அதுதான் சர்வதேச ஐக்கியமாக ஏற்றுக்கொள்கிறீர்களோ அதே ஐக்கியமும் சக வாழ்வும் ஒவ்வொரு மாதமும் குறிப்பாக ரமழான் ஷவ்வாலிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இரைவன் படைத்த பிறை ஒன்றே, உலகமும் ஒன்றே, மார்கமும் ஒன்றே, இறைவனும் ஒன்றே, இன்னும் எத்தனையோ இருக்கு.ஆகாக, பிறைக்கணக்கு என்பது எந் நாளும் ஒன்றே. இது எப்படி என்றால், ஷாஃபி மத்கபைக்கொண்ட எம் பாமர மக்கள் ஹஜ்ஜுக்கு வரும்போது, அவர்களை கூட்டிக்கொண்டு வரும் ஆலிம்கள் சொல்லுவார்களாம், விமாணத்தில் ஏறும்போது "நான் ஹனபி மத்ஹபுக்கு மாறுகிறேன்' என வாயால் மொழிந்து மனதாலும் என்னிக்கொள்ளுங்கள் என்று. ஏனெனில், ஷாபி சட்டத்தின் படி, ஆண் பெண் ஹஜ்ஜில் உள்ள இடங்களில் ஒருவருக்கொருவர் உரசல்களை எமது சக்திக்கு அப்பால் சந்திக்க நேரிடும் இதனால் வுழூ முறிந்து விடும், அதனால் அனைத்து நல்லமல்களும் பாலாகிவிடும் என்பதால். ஆனால், ஹனபியில் அப்படி இல்லை என்பதால்தான் அப்படி என்னத்தை மதம் மாற்றுவது போன்று மாற்றச்சொல்லுகிறார்கள். உண்மை எங்கயோ இருக்க, வெண்ணைக்கு எங்கயோ அழைகிறார்கள்.திருந்துங்கள், இறைவனை அஞ்சுங்கள், உங்கள் சுயனலங்களை இரைவனுக்காக விட்டுக்கொடுத்து மார்கத்தை உண்மைப்படுத்துங்கள்.இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக. தயவுசெய்து ஜப்னா முஸ்லிம் பாரபட்சமில்லாமல் இதனை பிரசுரிப்பீரா?
Jazakhallah
ReplyDelete