Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களை அரவணைப்பது தேர்தல் கால தந்திரம்

(எம்.சுஐப்) காணி பொலிஸ் அதிகாரங்களை வடக்குக்கு மட்டும் கோரும் விக்னேஸ்வரன் தமக்கு சட்டமும் தெரியாது நீதியும் தெரியாது என்பதை புலப்படுத்துகின்றார் என பாராளுமன்ற கவுன்ஸில் உறுப்பினரும், ஊடக அமைச் சின் மேற்பார்வை எம்.பியுமான அஸ்வர் எம்.பி தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை வடமாகாணத் தமிழ் மக்களே நகைக்கின் றனரெனவும் அரசியல் தெரியாத அவர் தமது கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள இந்த நேரத்திலாவது தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் மாகாணசபை நிர்வாகம் இருப்பதனால் அவற்றுக்கு அதிகாரம் தேவையில்லையெனவும் வடக்குக்கு அதிகாரம் தேவையெனவும் விக்னேஸ்வரன் கூறுவது கேலியானது எனவும் அஸ்வர் குறிப்பிட்டார்.

தமிழ்க் கூட்டமைப்பு இப்போது முஸ்லிம்களை அரவணைக்கின்றது. இது தேர்தல் கால தந்திரம். வடக்கு - கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆதரவில்லை.

இணைந் திருந்த போது அவர்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள் அநேகம். மர்ஹும் அஷ்ரப் வடக்கு -கிழக்கு இணைப்பை ஆதரித்தவருமல்ல. ஆனால் தற்போதைய மு.கா தலைமை கூட்ட மைப்புக்கு பகிரங்கமாகவோ அந்தரங்கமாகவோ ஆதரவளிப்பது ஏன் என்று புரியவில்லை என அஸ்வர் தெரிவித்தார். tw

2 comments:

  1. But far better than you!

    ReplyDelete
  2. கையில இருக்கும் அட்டைதான் ஐயாவுக்கு அழைகை மேலும் மெருகூட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.