Header Ads



தேசிய கட்சிகளுக்கு முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் விரயமாகியுள்ளது - ஹசன் அலி

இனவாத பிரிவினை அடிப்படையில் அரசியல் நடத்தப்பட்டமையால் முஸ்லிம் மக்களை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் புத்தளம், குருணாகல், மாத்தளை, கண்டிய, நுவரெலியா, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட ஒரு முஸ்லிம் வேட்பாளரேனும் வெற்றியீட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தேசிய கட்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகள் விரயமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில்  ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே தேர்தலில் வெற்றியீட்டினார். ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிங்கள தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத பிரிவினையில் அடிப்படையில் அரசியல் முன்னெடுப்பது மிகவும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இந்தியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன,மத பேதங்களை களைந்து இந்தியர்கள் தேசத்திற்காக இந்தியர்களாக ஒன்றிணைந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். gtn

1 comment:

  1. if they voted to you, you would have sold all votes to a major party. rather than going through you they voted direct to major parties.
    only worry is that you couldn't get any benefit this time.

    ReplyDelete

Powered by Blogger.