Header Ads



முஸ்லிம் கட்சிகளிடம் கொள்கைகள் ஏதாவது இருக்கிறதா..?

(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)

            மாகாண சபை தேர்தல் நடக்கப்போகிறது  என்று  அரசல் புரசலாக  செய்திகள் வரத்துவங்கிய நாட்களிலிருந்து  வேட்பு மனு  தாக்கல் செய்யும்  இறுதிவரை இலங்கை வாழ்  முஸ்லீம் சமுதாயம்  முஸ்லீம் கட்சிகள் எல்லாம் இணைந்து ஒரு  சின்னத்தின் கீழ் தேர்தலில் குதிப்பார்கள் என்று வாயைப்பிளந்து கொண்டு ஆவென்று  காத்துக்கொண்டிருந்தது. இறுதியில் இலவம் பழம்  வெடித்துச்சிதறி காற்றிலே பறந்ததுடன்  காத்திருந்த கிழியும் பறந்துபோன கதைதான்.

               முஸ்லீம் கட்சிகளுக்குள், அதன் குறுநில மன்னர்களுக்கு இடையில் பல பிரிவினைகள்  இருக்கலாம்,முரண்பாடுகள் இருக்கலாம்,ஆனால்  இலங்கை வாழ் முஸ்லீம்களைப் பொறுத்தவரை   இன்று  இந்த அனைத்துப்பிரிவுகளும் ஒரு குடையின் கீழ் நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.இது நம் அனைவராலும் நன்கு புரியப்பட்ட ஒரு விடயம்.

             நாம் ஒரு குடையின் கீழ் இல்லை என்பதை அறிந்த பேரினவாதம்  கிட்டத்தட்ட  நமது அடிப்படை  உரிமைகளில் அரைவாசிக்கு அருகில் கை வைத்து விட்டது. என்னென்ன விடயம் என்று அடிக்கடி படித்தும்,பார்த்தும் ,அனுபவித்தும் உங்களுக்கு மனப்பாடமாகி விட்டிருக்கும்.இந்த நிலையில் தனித்தனியே அவற்றைக் கூறவேண்டியதில்லை எனக்கருதுகின்றேன்.

              அண்மையில் நடைபெற்ற விடயம்  பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ச  அவர்களது கருத்து.இந்தக்கருத்து மிகவும் அபாயகரமான  ஒரு விடயம்.முஸ்லீம்களின் மீது சிங்கள பேரினவாதம் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு போடப்பட்ட  பாரிய அத்திவாரம்,சருவதேசத்தின் அனுமதிக்கு போடப்பட்டுள்ள விண்ணப்பம்.நமது இளைஞர்களை  இல்லாமல் செய்யவும், தமிழ் இளைஞர்களுக்கு நடைபெற்ற இன்னல்களிநை விட   இரட்டை  மடங்காகவும்  அடக்குமுறையை நம் மீது பிரயோகிப்பதற்கு மகிந்த அரசு திரைமறைவில் தயாராகிக்  கொண்டிருப்பதனை வெளிக்கொணர்ந்த அபாயச்சமிக்சையாகவுமே இதனை கருத வேண்டும்.

இஸ்லாமிய மதத்திலே சிற்சில  கொள்கை வேறுபாடுகளை  சுன்னாவினைப்பின்பற்றுவதினை அடிப்படையாகக் கொண்டு  சில குழுக்கள் பிரிந்துள்ள  நிலையை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து அதனை ஊதிப்பெருக்கவைத்து அவர்கள் முஸ்லீம் அடிப்படை வாதிகள் என்ற புதுப்பெயரும் சூட்டி இப்பொழுது அந்தக்குளுக்களில்  துடிப்பாக இயங்குகுபர்கள்  விபரமும் புலனாய்வுககுளுவினரால்  சேகரிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அடுத்த கட்டம் என்ன என்று கடந்த கால வரலாற்றினை நினைவுகூர்ந்து  கற்பனை செய்து பாருங்கள்.

இந்த இக்கட்டான சந்தர்பத்தில் அரசுடன் இணைந்த கொண்டு  தேர்தலில் போட்டியிடுபவர்களும்,அரசை எதிர்த்து தனியாக போட்டியிடுபவர்களும்  முஸ்லீம்களின் மீறப்படுகின்ற அடிப்படை உரிமைகளை மீட்டுத்தருவதற்கு  என்ன உபாயங்களை  கையாளப்போகின்றோம் என்று மக்களுக்கு இன்னும் கூறுகிறார்களில்லை,அவ்வாறான எந்த உபாயங்களும் அவர்களிடம் இருப்பதாகவும்  தெரியவில்லை.அவர்கள் நாலுபேரும் பேசுகின்ற செய்திகளையே மேடைகளில் பேசுகின்றார்கள்.செய்திகளை இவர்கள் சொல்லுவதர்காகவா மக்கள் இவர்களை  வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினார்கள்?இல்லை இவர்கள் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவே அனுப்பப்பட்டார்கள். இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் ஒருவர் ஹஜ்ஜிற்கு  நாலு லட்சம் என்கிறார் மற்றவர் இல்லை இல்லை அதை வீட கூட என்கின்றார் என்ன இழிபிளைப்பு இது?

                  இது ஒருபுறமிருக்க  ஒரு சிலர் அரசையும் தலைமையையும் துதி பாடுகின்றனர்,ஒரு சிலர் முன்னுக்குப்பின் முரணாக ஒவ்வொரு மேடைகளிலும் கருத்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.சிலர் ஒரு கட்சியையையும் அதன் தலைவர் அங்கத்தவர்களையும் குறை கூறிக்கொண்டிருக்கின்றனர்.இன்னும் சிலர் தங்கள் கட்சியின் அங்கத்தவர்களையே குறை கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.சிலர் நகைச்சுவைக் கதைகளையும் பாடல்களையும் பாடி சபைகளை சந்தர்பத்திற்கேற்றவாறு  நகைச்சுவை களமாக்கின்றனர்.

இந்த பிரச்சாரங்களை எல்லாம் நோக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் வெங்காயமாகவே இருக்கின்றது.இவர்களில் யார் எம்மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளிற்காக  ,அவற்றை மீட்டெடுப்பதற்காக   நேருக்கு நேர்  ஜனநாயக ரீதியில் போராடப்போகிறார்கள்?இந்தக்கேள்விக்கு விடை இதுவரை தெளிவில்லாமலேயே இருக்கின்றது.

அரசுடன் கூட்டுச்சேர்ந்த எந்த  அரசியல்வாதியும் முஸ்லீம்களுக்கான ஒரு தனி அமைச்சு வேண்டும் என்று கேட்கவில்லை ஏனென்றால் அதில் ஹஜ் கோட்டாவைத்தவிர எதுவித வருமானமும் இல்லை,இவர்களுக்கு வருடம் முழுவதும் நிதி தேவை ,கொந்தராத்துக்கள் இன்னும் இன்னோரன்ன சுகபோகங்கள் தேவை.இவையெல்லாம் முஸ்லீம் விவகார அமைச்சு ஒன்றில் இருக்காது.அதனால் யாரும் அது பற்றி சிந்திக்கவில்லை.அப்படி ஒரு அமைச்சு இருந்திருந்தால் இன்று முஸ்லீம்களது சமய அனுஷ்டான விடயங்களில் கண்டவனெல்லாம் கருத்துக்கூறிக்கொண்டிருக்க முடியாதே!

அரசு முஸ்லீம்களிற்கு அநியாயம் செய்கின்றது என்று கூறியவர்கள் அடுத்த மேடைகளில் சொல்கின்றார்கள் அரசை கவிழ்க்க  விடமாட்டோம்,அரசை பாதுகாப்போம்  என்கின்றார்கள்.சிலர் கூறுகின்றார்கள் எனது பகுதி முஸ்லீம்களுக்கு பிரச்சினை வந்தால் மட்டும் நான் குரல் கொடுப்பேன் என்று.கண்டியில் ஒருவர் எந்தக் கருத்தும் இல்லாமல்  மற்றவரை ஏசுவதற்காகவே மேடைகளில் பேசுகின்றார்.இப்படியானவர்களை  நம்பி நமது சமுதாயம்  இந்தத் தேர்தலிலும் எமாறப்போகின்றதா?

வடமாகணத்தை பொறுத்தவரை  முஸ்லீம்களுக்கு கிடைக்கவிருக்கும் ஆசனங்கள்  கேள்விக்குறியாகவே இருக்கின்றன.இரு பிரிவுகளுக்கிடையில் வாக்குச்சண்டை நடைபெறுகின்றதால் இடையாலே வேறு யாரோ  அங்கத்துவம் பெறப்போகின்றனர்.அரசியல் சாபக்கேடு முஸ்லீம் மக்களைப்பொறுத்தவரை அஷ்ரப் என்ற மேதாவியின் மறைவுடன் ஆரம்பமாகிவிட்டது.  இன்று முஸ்லீம் அரசியல்வாதிகள் வங்குரோத்து அரசியல் மட்டுமே செய்யக்கூடியதை அவதானிக்க முடிகின்றது.

                            கொள்கை ஒன்று இல்லாத முஸ்லீம் கட்சிகள், முதுகெலும்பற்ற தலைமைகள்   முஸ்லீம்களை பாதுகாக்க முதலில்  கொள்கைகளை வகுக்க வேண்டும். அவற்றை முஸ்லீம் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இழுத்தால் இழுப்பவர் பக்கம் சாய்வதையும் அரசியல் தலைமைகள்  தங்களது சுகபோகங்களையும் அமைச்சுப்பதவிகளையும் மட்டுமே குறிக்கோளாகக் கொள்வதையும் விட்டுவிட்டு மக்களின் நலன் என்ற கோசத்தையே உண்மையான லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான அடிப்படைத் தகைமகளினை எந்தக்கட்சி அதிகமாக கொண்டிருக்கின்றதோ  அந்தக்கட்சியையே மக்களும் ஆதரிக்க வேண்டும்.அவ்வாறு பார்க்கப்போனால் இம்முறை மக்கள் வாக்களிக்க எந்தக்கட்சியும் தகைமயற்றதாகவே தென்படுகின்றது.

4 comments:

  1. this is the truth that our Muslim society could not understand yet. the above situation is not only between our political leaders but also between our Muslim Groups.it would be better if they open their eyes before Sri Lanka become another Myanmar.

    ReplyDelete
  2. எவ்வளவு குத்தினாலும் வளிக்காத கூட்டம்.
    ரோசம் மானம் சூடு சொரனையில்லாத கூட்டம்.

    இதெல்லாம் இருக்க, புதிதாக போட்டியில் ஈடுபடுபவர்களின் பேனர்களை பாருங்கள்.

    உனது வெற்றி முழு சமூகத்தின் வெற்றி.

    எமது தாயகத்தில் தன்மானத்துடம் தலை நிமிர்ந்து வாழ நமது தலைமைத்துவத்துவத்தைப் பலப்படுத்துவோம்.

    இதற்கு முன்னர் இருந்தவர்கள் கிழித்துவிட்டார்கள். இப்போ புதிசா வந்து கிழிக்கப்போகிறார்கள்.

    எதோ ஒரு நாட்டு ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள பைத்தியக் காரர் வைத்திய சலையை பார்க்கப் போனாராம், நுழைவாயிலில் நின்ற ஒருவர்,சார் நீங்கள் யார் சார்? எனக் கேட்க, அவரோ, நாந்தான் இந்நாட்டு ஜனாதிபதி எனப் பதிலளிக்க, கேள்வி கேட்டவரோ ஓ,,,,, ஓ,,,, சிரித்துவிட்டு வாங்க நாங்களும் இப்படித்தான் உள்ளே வரும்போது வந்தோம் என்றாராம்.

    ReplyDelete
  3. முஸ்லிம்களை காட்டி கொட்டுப்பது

    ReplyDelete
  4. Itha yar soluringa pana petiku inthaie katikodutha munafikugalay

    ReplyDelete

Powered by Blogger.