Header Ads



சூடான் ஜனாதிபதியை பிடித்துத் தருமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

(Tn) நியூயோர்க்கில் அடுத்த வாரங்களில் நடைபெறவுள்ள ஐ. நா. பொதுக் குழு கூட்டத்தில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசர் பங்கேற்கவந்தால் அவரை கைது செய்யும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ. சி. சி.) அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. யுத்த குற்றச்சாட்டில் ஐ. சி. சியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் பசர், ஐ. நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. தமக்கு விசா விண்ணப்பம் கிடைத்திருப்பதை உறுதிசெய்த வொஷிங்டன் இது வருந்தத்தக்கது எனவும் விபரித்திருந்தது.

எவ்வாறாயினும் ஹேகை மையமாகக் கொண்டு செயற்படும் ஐ. சி. சியில் அமெரிக்கா உறுப்புரிமை பெறாத நிலையில் அதன் கோரிக்கையை நிறைவேற்றும் சட்ட ரீதியான கடப்பாடு அமெரிக்காவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பசர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

No comments

Powered by Blogger.