ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்ப வேண்டாம், புத்தகங்கள் அனுப்புங்கள் - மலாலா
ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்ப வேண்டாம். அதற்கு பதிலாக புத்தகங்கள் அனுப்புங்கள் என்று ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் சிறுமி மலாலா பேசினார்.பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்த 16 வயது சிறுமி மலாலா யூசுப்சய், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துப்பாக்கி சூட்டுக்கு ஆளானார். தலையிலும் கழுத்திலும் குண்டுகள் பாய்ந்தால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றார். பின்னர், இங்கிலாந்து மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் குணமடைந்து மீண்டு வந்தார். அதன் பிறகும் தொடர்ந்து பெண் கல்விக்காக பாடுபட்டு வரும் அவருக்கு உலக நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
தற்போது அமெரிக்காவின் நியுயார்க் நகரில் 68வது ஐநா பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று நடந்த சமூக நல மாநாட்டில் மலாலா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துப்பாக்கிகளை அனுப்புவதற்கு பதிலாக புத்தகங்களை அனுப்பி வையுங்கள். ராணுவ டேங்குகள் அனுப்புவதற்கு பதிலாக பேனாக்களை அனுப்புங்கள். ராணுவ வீரர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை அனுப்புங்கள். எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதும் நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதும் எனது கனவு. பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். ஆண்களுக்கு சமமான உரிமை¬யும் நீதியும் வேண்டும்‘ என்றார்.
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சம உரிமை கோறும் நீங்கள், ஒரு தடவை நீங்கள் பிள்ளை பெற்றால், மறுதடவை, உங்கள் கனவனை பிள்ளை பெற சொல்லுவீர்கள் அப்படியா? அப்போதுதான் சமவுரிமை பேணப்படும்.
ReplyDelete