Header Ads



இனவாதத்தின் மூலம் நாட்டை ஆட்சிசெய்ய ஆட்சியாளர்கள் முயற்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற இனவாத அரசாங்கத்திற்கு நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.காலி விளையாட்டுக் கழக மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இலங்கை என்ற நாடு நாட்டில் வாழும் சகல மக்களும் உரிமையுள்ள நாடு. இதனால் ஒரு இனத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைளை வழங்க முடியாது. விசேட அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க முடியாது, தெற்கிற்கும் வழங்க முடியாது.

இப்படி அதிகாரங்களை பிரித்து கொடுத்தால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. காணி அதிகாரங்கள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். போரில் மக்கள் இழந்தவற்றை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும். முழு நாட்டுக்கும் போரில் இழந்தவற்றை வழங்க மீள வழங்க வேண்டும்.

இனவாதத்தின் மூலம் நாட்டை ஆட்சி செய்ய ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் இனவாத அரசாங்கம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடுமையான இனவாதி.

மக்களின் அனுமதியில்லாமல் மக்களின் வளங்களை தமக்கு தேவையான வகையில் பயன்படுத்தி, பல காலங்களுக்கு ஆட்சியாளர் என்ற கிரீடத்தை தனது தலையில் சூடிக்கொண்டு நீண்டகாலம் நாட்டை ஆட்சி செய்வதே மகிந்த ராஜபக்ஷவின் நோக்கம் என்றார்.

No comments

Powered by Blogger.