Header Ads



உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு - காணி அதிகாரம் மாகாண அரசுக்கு இல்லை

காணி அதிகாரம் மாகாண அரசுக்கு அன்றி மத்திய அரசுக்கே உரியது என உயர் நீதிமன்றம் இன்று 26-09-2013 தீர்ப்பளித்துள்ளது.

காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோரே இத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 காணி அதிகாரம் தமக்கு வழங்கப்பட வேண்டுமென தமிழர் தரப்பு கோரிக்கை விடுத்தும் இதனை இந்திய வணியுறுத்திவந்த நிலையிலுமே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2 comments:

  1. இலங்கைக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  2. Very Good theerppu..... sabas.....
    Excellent.....

    ReplyDelete

Powered by Blogger.