Header Ads



மன அழுத்தத்தை அறியும் சட்டை வடிவமைப்பு

 இதய துடிப்பு, மூச்சு விடும் அளவு, உறக்கம் போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டு, மனிதனின் மன அழுத்தத்தை அளவிடும் சட்டையை, கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். 

கனடா ஆய்வாளர்கள், நவீன முறையில் வடிவமைத்துள்ள, புதிய சட்டையின் செயல்பாடுகள், ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்டுள்ளன. விசேஷ கருவி பொருத்தப்பட்டுள்ள, இந்த சட்டையை அணிபவரின், உறக்கம், அவரின் மூச்சு வாங்கும் அளவு, இதயத் துடிப்பு போன்றவற்றை, துல்லியமாக அளவிட முடியும். 

இந்த அளவுகள், சட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள, ஸ்மார்ட் போனில் தெரியும். இதன் மூலம், இதை அணிபவரின், இதயத் துடிப்பு மற்றும் மூச்சு விடும் அளவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் அவரின், மன அழுத்தத்தின் அளவை கணக்கிட முடியும். இதே போல், இதை உறங்கும் போது அணிந்து கொள்வதின் மூலம், அவரின் உறக்கம் பற்றிய அளவீட்டையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சட்டைக்கு, "ஹெக்சோஸ்கின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆடையை, விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதின் மூலம், தங்கள் பயிற்சியின் போது ஏற்படும் குறைகளை அறிந்து, செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என, ஆடை வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர். சாதாரண ஆடையைப் போலவே காட்சியளிப்பதால், நேரடியாக பயிற்சிகளின் போது, விளையாட்டு வீரர்கள் அணிந்து கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.