தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மக்களுக்கு ஒரு கல்லையாவது பெற்றுக் கொடுக்க முடியுமா?
வடக்கில் இனவாதத்தின் மூலம் எதனையும், எவருக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது, முடியுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களு்க்கு ஒரு வீட்டின் கல்லையாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,சர்வதேசத்துக்கு பொய்யுரைப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியி்றுப்பு பிரதேசங்களில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முல்லை மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் பேசுகையில் கூறியதாவது -
இன்று வன்னி மாவட்டம் பல்துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவருகின்றது. இதன் மூலம் மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவருகின்றனர்.இதனை தாங்கிக் கொள்ள முடியாத,தமது கொள்கையினை மக்களுக்கு பலவந்தமாக திணி்க்க முடியாத நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுள்ளது.
கடந்த 30 வருடம் எமது மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்த நன்மைகள் என்ன,ஒரு கல்லைக் கூட வீடுகட்டுவதற்கு பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள்,எமது கட்சி இந்த மக்களுக்கு வீடமைப்பு திட்டங்களை கொண்டுவருகின்ற போது, அதற்கெதிராக விசமத்தனமான பிரசாரங்களில ஈடுபட்டுவருவதை நாம் காணுகின்றோம்.இதற்கு சில ஊடகங்களும் துணைபோயுள்ளன.
மக்களின் நிம்மதியான வாழ்வை சீர்குலைத்து, மீண்டும் ஒரு இருள்மிகுந்த காலத்தை எற்படுத்த முனையும் சக்திகளுக்கு தகுந்த பாடத்தை தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த தேர்தலில் வழங்குவார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்
கண்ணாடி கூண்டினுல் இருந்து கொன்டு கல் எரிவது போன்றுதான் இவரது கதை??????
ReplyDeleteமானமும், ரோஷமும் உள்ள மனிதர்களுக்கு வீடுகள் கட்டக் கல்லுகள் வாங்குவதை விட சொந்த மண்ணில் குந்தியிருக்கும் உரிமைதான் மேல்.
ReplyDeleteநாங்கள் சவால் விடுகின்றோம். எங்கே நீங்கள் நீதியாகத் தேர்தலை நடாத்தி த.தே.கூட்டமைப்பு மாகாண ஆட்சிக்கு வர வழி சமையுங்கள். அவர்களின் மாகாண ஆட்சி நடவடிக்கைக்கு இடையூ
றுகள் ஏற்படுத்தாமல் சிறிது காலம் ஒதுங்கி இருங்கள். அவர்கள் உலக நாடுகளின் உதவிகளைப் பெற்று வடக்கு மக்களுக்கு கல்லையென்ன வீடுகளையே கட்டிக் கொடுத்து உரிமைகளுடன் குடியிருக்கச் செய்வார்கள். நீங்கள்தான் எதிர்க்கட்சியினர் எதுவுமே செய்யக் கூடாது என்ற கொள்கையுடையவர்களாச்சே.. பிறகு எப்படி அவர்களால் கல்லை என்ன மண்ணைத்தானும் எப்படிக் கொடுக்க முடியும்?
எமது காத்தான்குடியில் 1996ல் நகர சபைக்கு தெரிவான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடமன் மேம்பாலம் ஒன்றை அமைத்தனர். ஆனால் எதிர்க்கட்சியின் சேவைகள் அடையாளமாக இருக்கக்கூடாது என்ற கொள்கையுடைய ஆளுந்தரப்பு அரசியல்வாதி (அவரும் உங்கள் கட்சியாளர்தான்) வீதி அபிவிருத்தி என்ற பெயரால் போதியளவு இடம் இருந்தும் அந்தப் பாலத்தை உடைத்து அகற்றி இன்று அடையாளமே இல்லாது செய்துள்ளதை அறிவீர்களா?
இந்த இலட்சணத்தில் எதிர்க்கட்சிகளிடம் நீங்கள் சவால் வேறு விடுகிறீர்கள்.
மக்களே..! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. கவரிமான் மானம் என்ற மயிரை இழந்தாலும் உயிர் வாழாது என்றெல்லாம் சொல்வார்கள். அரசாங்கம் தேர்தல் காலத்தில் அள்ளியிறைப்பதை ஓடியோடிப் பெற்றுக் கொள்வது உங்களுக்குரியதே! ஆனால் உங்கள் உரிமையை நிர்ணயிக்கும் வாக்கு? அதைப்பற்றி 20ம் திகதி நள்ளிரவு வரை நன்கு சிந்தியுங்கள்.!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
V.good & u r right.
Deleteso dears very carefull you have still time to think well.take care
Senkallai vida "Urimai" enpathu miha mukkiyam enpathu ivarukku theriyaathu...
ReplyDeleteH.avaruko allathu avarathu enaya muslim amaicharhaluko ithellam enka wilanga powuthu.wetkam kettawarl iqarhal
Deleteஉரிமைக்குப் போராடினால் சலுகைகளாவது கிடைக்கும்.
ReplyDeleteவெறும் எலும்புக்காகப் போராடினால், அந்த எலும்பைத்தேடுவதற்குரிய இடமும் கிடைக்காது என்பதை ஆலுந்தரப்பினர் எப்போது உணரப்போகிறார்களோ!!