Header Ads



புதுடில்லி ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் ரவூப் ஹக்கீம்


தற்பொழுது இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின்; 52 ஆவது மாநாட்டில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்  திங்கள் கிழமை (09) உரையாற்றுவதையும், அதில் கலந்துகொண்ட ஒமான் நாட்டு நீதியமைச்சர் அப்துல்லா சயீத் அல் சயீதியுடன் இரு நாடுகளினதும் நீதித்துறை தொடபான விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம். நீதியமைச்சர் ஹக்கீம் 48 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் இவ் அமைப்பின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சருடன் அவரது ஆலோசகரும், இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் இம் மாநாட்டு அமர்வுகளில் பங்குபற்றுகிறார்.


No comments

Powered by Blogger.