Header Ads



சிரிய இரசாயன ஆயுதப் பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்

சிரிய இரசாயன ஆயுதப் பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலில் 1429 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவில் இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற தொழில்சார் முறையிலான விசாரணைகள் நடத்தப்பட்டு இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதனை கண்டறிய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இரசாயன ஆயுதப் பயன்பாடு தடை தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.