சிரியா மீது கடல் வழியாக ஏவுகணைகள் தாக்குதல் - ரஷ்யா தடுத்து வீழ்த்தியதாம்..!
சிரியா மீது கடல் வழியாக இரு ஏவுகணகைள் தாக்கப்பட்டதாகவும், அதனை ரஷ்யா தடுத்து வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் அதிபர் பஷர் அல்அசாத் ஆட்சியை அகற்ற மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் சிரியாவிற்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. சிரியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்தியதரை கடல் பகுதியின் கிழக்கே சிரியா மீது இரு ஏவுகணைகள் தாக்கப்பட்டதாகவும், இதனை ரஷ்யா தடுத்து வீழ்த்தியதாகவும் , ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
News 2
News 2
சிரியா மீது இன்று 2 ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஏவுகணை ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டதாகவும், மறு தரப்பில் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாகவும், ரசாயன பைப்லைன்கள் உடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய மற்றும் சிரியா தொலைக்காட்சிகளில் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து சிரியா மீது 2 ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியிட்டது. கடல் பகுதியில் இருந்து வந்த ஏவுகணைகள் ரஷ்யா உதவியுடன் ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வீழத்தப்பட்டதாகவும். இந்த ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மாஸ்கோ நேரப்படி காலை 10. 16 க்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஏவுகணை யாரால் ஏவப்பட்டது என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் ரஷ்யா இதனை மறுத்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவத்தை குவித்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment