Header Ads



சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக நிரூபித்தால் தாக்குதலுக்கு ஒத்துழைக்க தயார்

ரசாயன ஆயுதங்களை ஏவி அதிபர் பஷர் அல் ஆசாத் பொதுமக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்.

இந்த தாக்குதல் தேவையற்றது என கூறிவரும் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பு நாடுகள் சிரியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ரசாயன தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் அல்-கொய்தா போன்ற அமைப்புகளால் புனையப்பட்டவை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று பேட்டியளித்த புதின், 'தற்போதைய சர்வதேச சட்டங்களின்படி, தனி அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை மட்டுமே உத்தரவிட முடியும்.

அதை மீறிய வகையில் எந்த நாட்டின் மீதும் இன்னொரு நாடு தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்தவோ, அனுமதிக்கவோ முடியாது' என்று கூறியுள்ளார்.

சிரியா அரசு ரசாயன தாக்குதலை நடத்தியுள்ளது என நிரூபிக்கப்பட்டால், சிரியா மீதான தாக்குதலுக்கு ஒப்புக்கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டபோது, 'நான் அதை எதிர்க்க மாட்டேன்' என்று புதின் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.