Header Ads



அமைச்சர் பௌசி ஜால்ரா அடிப்பதை நிறுத்தவேண்டும் - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

ரஸ்மின் MISc -  துணை செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

“இலங்கையில் பள்ளிகள் தாக்கப்படுவது, உடைக்கபடுவது வெறும் பிரச்சாரங்கள் தான்” என நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். மட்டுமன்றி முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலும், ஒரு கேடுகெட்ட செயலாகும். முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்படுவதும், பள்ளிகள் உடைக்கப்படுவதும் கண்கூடாக நடந்து வரும் ஒரு செயல்பாடாக இருக்கும் போது அமைச்சர் பௌசி இந்தக் கருத்தை விதைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோலவத்தை - கிரேன்பாஸ் பள்ளி தாக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர் பௌசியின் வீட்டில் தான் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகமும், பௌசி உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்களும் பள்ளி தொடர்பான பேச்சுவார்தைகளில் கூட ஈடுபட்டோம்.  இப்படி இவ்வளவு தெளிவான செய்திகள் இருந்தும் அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிப்பதற்காக இவ்வாறு பேசுவதை எந்தவொரு முஸ்லிமாலும் ஜீரனிக்க முடியாது.

கடந்த கிழக்கு மாகாண தேர்தல் நேரத்தில் இதே பிரச்சாரத்தைத் தான் அஸ்வர் எம். பி யும் செய்து வந்தார். இப்போது அஸ்வருக்கு நான் சலைத்தவன் அல்ல என்ற அடிப்படையில் பௌசியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். தங்கள் வாக்கு வங்கிக்காக சமுதாயத்தை விற்றுப் பிழைக்கும் செயல்பாட்டை பௌசி போன்றவர்கள் கைவிட வேண்டும்.

பௌசி சொல்லுவது சுத்தப் பொய்.

2011 செப்டம்பர் 10 தேதி இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரம், ஓட்டுப்பள்ளம் தர்கா உடைப்பில் ஆரம்பித்த இனத்துவேஷ நடவடிக்கைகள் பள்ளிகளின் மீது கைவைக்கும் நிலைக்கு சென்று இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த கால இலங்கை வரலாற்றில் ஏற்பட்டிருந்த பயங்கர யுத்தம் காரணமாக பலவிதமான கஷ்டங்களை அனுபவித்த, பல ஆயிரக்கணக்கான உயிர்களை யுத்தத்தின் மூலம் பலி கொடுத்த ஒரு சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தந்திரோபாய அரசியல் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

அனுராதபுரம் தர்கா உடைப்பில் ஆரம்பித்து பள்ளிகளை உடைக்கும் முயற்சியில் மும்முரமாக நகர்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை பௌத்த கடும்போக்கு வாதிகளை தட்டிக் கேட்பதற்கோ, அல்லது தடுத்து நிறுத்துவற்கோ யாரும் தயாரில்லை என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது.

இலங்கை சுதந்திர நாடு இந்நாட்டில் யாரும், எதையும் செய்யலாம். மக்கள் சுதந்திரத்திலும் மத சுதந்திரத்திலும் அரசு தலையிடாது என்ற சாக்குப் போக்கு பதிலைச் சொல்லி காலம் கடத்துகின்றது இலங்கையின் ஆளும் சுதந்திர முன்னனி அரசு.

இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அமைச்சர்களோ அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளுக்கும், ஆரம்பரத்திற்கும் ஆசைப்பட்டு அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக மாறிப் போன காரணத்தினாலும், அரசாங்கத்தில் நிரந்தரமாக நிலைக்க வேண்டும் என்பதினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் விஷயத்தில் எவ்வித மறுப்பையும் கூறாமல் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றார்கள்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கமால் இருந்தால் கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் நா கூசாமல் “ இலங்கையில் எந்தப் பள்ளியும் உடைக்கப்படவில்லை“ என்று பச்சையாக பொய் சொல்வதுதான் வேதனைக்குறியதாகும்.

இது வரைக்கும் இலங்கையில் பல பாகங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பலவிதமான செயல்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அன்றாடம் அறியக் கூடியதாகவுள்ளது. அந்த வகையில் இதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 50 க்கும் மேற்பட்ட துவேஷ செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

 இந்த செயல்பாடுகள் அனைத்தும் இலங்கையை ஒரு மியன்மாராக மாற்றும் முயற்சி திரை மறைவில் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்துள்ளது.

காலா காலமாக தாய் நாட்டிற்கு எவ்வகையிலும் துரோகமிலைக்காத, பல வகைகளிலும் தியாகங்கள் செய்த இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து தற்போது நிகழ்ந்து வரும் சம்பவங்கள் குறித்த சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இறைவனின் அருளால் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக போராடும் நிலைக்கு இன்றைய இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தின் மூலம் தான் நாம் நமது உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆதலினால் இன்ஷா அல்லாஹ் நமது ஜமாத் சார்பாக நாடளாவிய ரீதியில் இனத் துவேஷிகளுக்கும், இனத் துவேஷ செயல்பாடுகளுக்கும் எதிரான சாத்வீக போராட்டத்தை எழுத்திலும், பேச்சிலும் நாம் முன்னெடுப்பதற்கு உறுதி எடுத்துள்ளோம் என்பதை இவ்வாக்கத்தின் மூலம் தெரியப்படுத்துகின்றோம்.

9 comments:

  1. சிரேஸ்ட அமைச்சர் பெளசிக்கு மனனோய் காரணமாகத்தான் அவர் அப்படிச்சொல்லியுள்ளார் ஆகவே அவரை அரசாங்கம் பதவியில் வைத்துள்ளது என்னவோ அரசாங்கத்தின் இலாபத்துக்காகவே தவிர அவரில் எதுவும் இல்லை. இருப்பினும் அவரை உரிய முறைப்படி மனனோய் வைத்தியரிடம் கொண்டு சென்று உரிய சிகிச்சை செய்யுமாறு நாங்கள் மிகவும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

    ReplyDelete
  2. well done SLTJ. i appreciate your GUTTS

    all muslims will be supported to your future activities...


    ReplyDelete
  3. Dear Br:
    I completely agree on what you said. As the plight of our so called Muslim ministers don't have any shame, it is no surprise the Bodu Bala Sena will continue their evil actions.I already remarked on his message: Ya ayyuhallatheena amanu aminu.

    ReplyDelete
  4. fausy why your doing like this munafiq things you don't know whats going on in srilanka BBS what they are doing gotha saying muslims all are terrorist fausy are you terrorist? you talking nonsense i am strictly telling you you must shut your mouth i don't know why ASATH SALEE being silent his uncle fausy saying like this reports any other minister say some thing he immediately giving talk where the asath salee? he must ask to fausy regarding this talk.then only we can believe asath salee also.

    ReplyDelete
  5. இந்த பௌசியின் மருமகன் அசாத்சாலி இந்த அறிக்கை பற்றி என்ன சொல்லி மக்களிடம் இனி பிரச்சாரம் பண்ணப்போறார்?

    மக்களே, இந்த பௌசி மற்றும் ஆசாத் பற்றி தெழிவு பெறுங்கள். ஏமாந்து விடாதீர்கள்.... ஒரு வாக்கேனும் அழித்து விடாதீர்கள்.....

    ReplyDelete
  6. nalla visayam than carry on.this is a right way

    ReplyDelete
  7. உங்களது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆனால் உங்களுது போராட்டம் இன ஐக்கியத்தை விரும்பும் சிங்கள மக்களை பாதிக்காத வகையில் மிகவும் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

    இதில் உள்ள யதார்த்தமான விடயம் என்ன வென்றால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அது இந்த அரசாங்கத்தால் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டு சட்டம் ஒழுங்ககை மீறுபவர்களை பாதுகாக்கவும் முயற்சி செய்கிறது. எனவே இந்த அரசாங்கம் மாறினால் தற்போது உள்ள சூள்னிலைகலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  8. What happen to our minister mr fouzy.may something wrong.go & check up your head.may be low memory or ...........
    Is he a muslim?

    ReplyDelete
  9. தன்முன் யானை ஒன்றுபோகும் போது... அது யானை அல்ல புனை என்று சொல்லக்கூடியவர்கள்தான் இவர்கள். இவர்கள் கிளிப்பிளளை போன்றுதான் 'சொல்லிக்கொடுத்ததைத் தான் செர்ல்ல முடியும்'

    ReplyDelete

Powered by Blogger.