மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலே முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டனர் - பெளசி
(எம்.எஸ். பாஹிம், எம்.ஏ. அமினுல்லா)
மாகாண சபைத் தேர்தல் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும் ஐ.ம.சு.முவுக்கு வாக்களித்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். இனவாதத்தை தூண்டுவோருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலே முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற ஐ.ம.சு.மு. இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அவர் மேலும் கூறியதாவது,
இந்த தேர்தலில் ஐ.ம.சு.மு. பெருவெற்றியீட்டும் இதில் முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும் இன்றேல் அதனால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் சிலர் இனவாதத்தை தூண்டி வாக்குப்பெற முயல்கின்றனர்.
பள்ளிவாசல்கள் உடைப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், எமது ஜனாதிபதி பள்ளிவாசல்களை கட்டியே வருகிறார். சகல இன மக்களையும் ஒன்றாக மதித்து எமது ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார். எமது ஜனாதிபதியின் ஆட்சியிலேயே முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுகின்றனர். ஜே.ஆரின் ஆட்சியில் இஸ்ரேலை கொண்டுவர முயன்ற போது முஸ்லிம் தலைவர்கள் எதிர்த்தனர். ரணில் எமக்கு இங்கு இருக்க முடியாவிட்டால் வேறு நாட்டுக்கு செல்லுமாறு அவர்கள் கூறினர்.
புலிகள் பள்ளிவாசலினுள் சென்று முஸ்லிம்களை கொன்றனர். இன்று முஸ்லிம்களுக்கு தடையின்றி மதத்தை பின்பற்ற முடிந்துள்ளது. இம்முறை ஹஜ்ஜுக்கு சென்ற முதலாவது ஹஜ் குழு விமான நிலையத்திலே ஜம்ஆ தொழுதது வரலாற்றில் முதற்தடவையாகவே இவ்வாறு நடந்தது. அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெல்வார். நான் மட்டுமே சுதந்திரக் கட்சியினூடாக வென்ற ஒரே எம்.பி. முஸ்லிம்கள் முஸ்லிம் உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியிடம் தீர்வு காண முடியும். நாம் என்றும் அவருடன் பேசி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இன்னும் 10 வருடங்கள் ஜனாதிபதியே ஆட்சியில் இருப்பார். எனவே முஸ்லிம்கள் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டிய ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும் எமது உரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.முவை வெல்லவைப்போம். இனவாதம் தூண்டும் கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்றார்.

Mr fowzy how many times shame dialog we r not poolish people please change the dialog go ahead you and all Muslim minister are slave of the mr & co
ReplyDeleteபாவம்..... இவர்களைத்தான் 'கிளிப்பிள்ளைகள்........' என்பார்கள்.?????? நாய் வேசம் போட்டால் குரைத்துத்தான் ஆவவேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்....???
ReplyDeleteதூ... நீயெல்லாம் எமது சமூகத்தின் தலைவன்..! கேடுகெட்ட ஜென்மம்..!!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-