Header Ads



'உணவு பாதுகாப்புத் திட்டத்தில்' வீட்டுத் தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு


(அனா)

 'உணவு பாதுகாப்புத் திட்டத்தில்' வீட்டுத் தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான ஹிஜ்றா நகர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

முஸ்லிம் எயிட்ஸ் நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எல்.எம்.றமீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், முஸ்லீம் எயிட்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

தலா ஒரு குடும்பத்திற்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான வீட்டுத் தோட்டத்திற்கான உபகரணங்களும் மரக்கன்றுகளும் பயிர் விதைகளும் கூட்டுப் பசளைகளும் முஸ்லிம் எயிட்ஸ் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் தொடர்பான பயிட்சிகளும் வழங்கப்படவுள்ளதாக முஸ்லீம் எயிட்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.