இல்லாத முஸ்லிம் பயங்கரவாதத்தை அரசு உருவாக்க முயற்சிக்கிறது - விஜித ஹேரத்
(மொஹொமட் ஆஸிக்)
முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்றைப் பற்றி பேசி அரசு இல்லாததை உண்டு பண்ணி காலாகாலம் சிங்கள முஸ்லிம் மக்கள மத்தியில் நிலவுகின்ற ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னனியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்றைப் பற்றி பேசி அரசு இல்லாததை உண்டு பண்ணி காலாகாலம் சிங்கள முஸ்லிம் மக்கள மத்தியில் நிலவுகின்ற ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னனியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று 2013 09 14 மாலை கட்டுகஸ்தோட்டை நகரில் இடம் பெற்ற தேர்தல் பிரசச்ரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் இவ்வாரும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு தனது உறவினரை அனுப்புவதற்கு பயிற்றுவிக்கும் இடமாக மாகாண சபையை அமைச்சர்கள் உருவாக்கி உள்ளார்கள். பிரதமரின் மகன், அமைச்சர்களது உறவினர்கள் என பலர் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இது மக்களின் சேவைக்காக நடாத்தப்படும் தேர்தல் அல்ல. பாராளுமன்றத்திற்கு செல்ல தமது உறவினர்களை பயிற்றிவிக்கும் ஆரம்ப பாடசாலையாக கருதப்படுகிறது.
அரசு நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தவற விட்டுள்ளது. மக்கள் அரசுக்கு வாக்களிப்பதன் மூலம் எதனை எதிர்பார்த்தார்களோ அது கிடைக்கவில்லை. பொருட்களின் விலை குறைப்பதற்கு பதிலாக கூட்டியுள்ளனர். குடிநீர் கேட்டவர்களுக்கு அதற்கு பதிலாக துப்பாக்கி வேட்டுக்கள் கிடைத்தன. மூவருடைய உயிர் பரிக்கப்பட்டது.
யுத்த முடிவுக்குப் பின் மக்களுக்கு சலுகை கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்ததார்கள். ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை. யுத்த காலத்தில் 42 ரூபா இருந்த சீனி ஒரு கிலோவின் விலை 110 ரூபாவாக உயரந்துள்ளது மற்றைய பொருட்களும் அவ்வாரு உயர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே என அவர் தெரவித்தார்.
Post a Comment