கதை முடிந்தது..
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் வசித்து வந்தவன் ஏரியல் காஸ்ட்ரோ (53) என்பவன் ஆவான். இவன் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தான்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெளியே விடாமல் அடைத்து வைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்தான். அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்தபோது, அவரை கருக்கலையும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டுள்ளான்.
கடந்த மே மாதம், இந்தப் பெண்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தபோது தான் இந்தக் கயவனின் சுயரூபம் தெரிந்துள்ளது. அதன்பின்னர், காவல்துறை மற்றப் பெண்களையும், பெர்ரிக்குப் பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்தது.
சில மாதங்கள் கழித்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்காட்சி ஒன்றில் தோன்றிய அந்த மூன்று பெண்களும் தங்களுக்குத் தனிமை தேவைப்படுவதாகவும், காஸ்ட்ரோ மீதான வழக்கை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்கள்.
காஸ்ட்ரோவைக் கைது செய்த காவல்துறை, இவன் மீது 977 குற்றங்களைப் பதிவு செய்தது. நீதிமன்றத்துடன் அவன் மேற்கொண்ட மனு ஒப்பந்தத்தின்பேரில், அவனுக்கு ஜாமீனில் வரமுடியாதவண்ணம் ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பை கேட்டவுடன் அதிர்ந்துப்போன ஏரியல் காஸ்ட்ரோ சிறையில் தற்கொலை செய்துக்கொள்ளும் மனநிலையில் இருப்பதாக சிறை அதிகாரிகள் சந்தேகித்தனர்.
இதனையடுத்து, அவனது அறையை ஒவ்வொரு 1/2 மணி நேரமும் சிறை காவலர்கள் கண்காணித்து வந்தனர். ஆனால், சிறை காவலர்களின் கண்காணிப்பையும் மீறி உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சிறை அறைக்குள் தூக்கு மாட்டிக்கொண்டு ஏரியல் காஸ்ட்ரோ பிணமாக தொங்கினான்.

Post a Comment