அமெரிக்கர்களிடையே போர் குறித்த ஆர்வம் குறைந்து வருகிறதாம்..!
(Thoo) அமெரிக்கர்களிடையே போர் குறித்த ஆர்வம் குறைந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா பெரும் முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் அந்நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை என்பது காலப் என்ற பிரபல ஏஜன்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருபது ஆண்டுகளில் முதன் முதலாக பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் போரை எதிர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்காக எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளை 51 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர். 13 சதவீதம் பேர் நடுநிலை வகிக்கின்றனர். 31 சதவீதம் பேர் மட்டுமே சிரியாவை தாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னர் ஏ.பி.சி. நடத்திய ஆய்வில் 60 சதவீதம் பேர் சிரியா மீது விமானத் தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கான், ஈராக் மீது தாக்குதல் நடத்த இதை விட அதிகமான அமெரிக்கர்கள் ஆதரித்திருந்தனர். அன்று ஆதரித்தவர்களில் ஒரு பிரிவினர் போரை ஆதரித்ததை தவறு என்று இப்போது நம்புகின்றனர்.
Post a Comment