கல்முனை றோயல் வித்தியாலயத்திற்கு (மெஸ்டரோ) நிதியுதவி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை கிறீன் பீல்ட் வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தில் 5000 இடைநிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தினை புரணப்படுத்தும் நோக்கில் பாடசாலை சமூகத்தினரால் அது சம்பந்தமாக நிலவிய நிதித்தட்டுப்பாடு விடயமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து கல்முனை முஸ்லிம் கல்வி சமூக ஆராய்ச்சி அமைப்பு ( மெஸ்டரோ) மூலமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணம் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைஸால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தனவந்தர் ஒருவர் மூலமாக பெற்ற பணத்தினை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிறீன் பீல்ட் வீடமைப்பு திட்ட முகாமைத்துவ சபையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.கபுல் ஆசாத் , மெஸ்ரோ அமைப்பின் செயலாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கலாநிதி எஸ்.எல்.அஸீஸ் , பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.முஹம்மது அலி ஜின்னா , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.தௌபீக் , மெஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஜவாஹிர் , பொருளாளர் ஏ.எம்.எம்.முஸ்தகீன் , மாவட்ட செயலாளர் ஸீ. சர்ஜுன் , மாவட்ட பொருளாளர் நௌபர் ஏ பாவா , ஊடக செயலாளர் ஏ.பி.எம்.அஸ்ஹர் உட்பட பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment