மியன்மாரில் மீண்டும் வன்முறை - முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரை
(tn) இரு முஸ்லிம்களின் வீடுகள் கலகக்கார கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து வடமேற்கு மியன்மாரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கரையோர நகரான தன்வாவில் பெளத்தர் ஒருவர் தம்மை முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவர் வாய்மூலம் அவமதித்ததாக பொலிஸில் முறையிட்டதைத் தொடர்ந்தே கலவரம் வெடித்ததாக பதற்றம் கொண்ட ரகின் மாநிலத்தின் அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஞாயிற்றுக்கிழமை இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த முஸ்லிம் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment