பிரேசிலில் உலகக் கிண்ணப் போட்டி - தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று..!
பிரேசிலில் உலகக் கிண்ணப் போட்டி ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறிப்பாக கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸில் நடைபெறவுள்ளது. கூடாரங்களில் தங்க வைக்கப்படுவதாகவும், பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தொழில் பெற்றுக்கொள்வதற்கு பெருமளவு லஞ்சத்தை வழங்க வேண்டியிருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தொழிலாளர்கள் அடிமைகள் போன்று நடத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment