இறக்காமத்தில் கல்வி அடிப்படைக் கருத்தியல்கள் நூல் வெளியீடு
(எஸ்.எல். மன்சூர்)
இறக்காமம் அபூபக்கர் நளீம் ஆசிரியர் எழுதிய 'கல்வி அடிப்படைக் கருத்தியல்கள்' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்;வரும் சனிக்கிழமை(21.09.2013) மாலை 4.05க்கு இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. அதிபரும், இறக்காமம் மத்தியஸ்த சபையின் தலைவருமான பீ.ரி. சுபைதீன் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்குமாகாணக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.ஏ.நிஸாம், கௌவர அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம். நஸீர், விசேட அதிதியாக அக்கரைப்பற்று உதவிக் கல்விப்பணிப்பாளரும், திறந்த பல்கலைக்கழக நிபுணத்துவ ஆலோசகருமான அல்ஹாஜ் எம்.எல்.எம். லாபீர், சிறப்பு அதிதியாக விழுதுமேம்பாட்டு மையத்தின் பணிப்பாளரான திருமதி சாந்தி சச்சிதானந்தம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். நூலின் முதற்பிரதியை சட்டத்தரணி பாருக் சாஹிப் பெறுகின்றார். கல்விப்புலத்தில் சிறந்த தேடலுள்ள ஆசிரியரான இறக்காமம் அபூபக்கர் நளீம் எழுதிய வெளியிடுகின்ற தனது முதலாவது கட்டுரைத் தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment