முட்டையை பிரிட்ஜில் வைக்கலாமா...?
முட்டையை பிரிட்ஜில் வைக்கலாமா? வெளியில் வைத்தால் நல்லதா என்ற விஷயத்தில் முரண்பட்ட கருத்துகள் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக விலங்கியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் ரோசமுன்ட் பெய்ட் மற்றும் ஜேனட் கொரி ஆகியோர் விரிவான ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு குழுவினர், சில முட்டைகளை பிரிட்ஜிலும் சிலவற்றை வெளியிலும் வைத்து 2 வாரங்கள் கண்காணித்தனர். இதில் எல்லா முட்டைகளும் கெட்டு போகாமல் இருந்ததை உறுதிப்படுத்தினர்.
இதேபோல் அமெரிக்காவில் உள்ள சயின்ஸ் ஆப் புட் அண்ட் அக்ரிகல்சர் என்ற இதழ் கடந்த ஆண்டு முட்டை உணவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு ஆய்வு நடத்தியது. ஆய்வுக்காக சுமார் 2,000 முட்டைகள் எடுத்து கொள்ளப்பட்டு 4 வாரங்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் கண்காணிக்கப்பட்டது. பொதுவாக அறையின் வெப்ப நிலை (ரூம் டெம்ப்ரேச்சர்) என்பது 7.2 டிகிரி செல்சியசில் இருந்து 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிக பிரபலமான மேயோ கிளினிக் கூறுகையில், முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்த பின்னர் 2 மணி நேரம் வெளியில் இருந்தால் கூட அதை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளது. நீண்ட நாட்கள் முட்டையை பிரிட்ஜில் வைத்திருந்தாலும் முட்டை கெட்டு விடும். அத்துடன் சுவையும் கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர். மேலும் பிரிட்ஜில் உள்ள மற்ற உணவு பொருட்களின் வாசம் முட்டையின் ஒடு வழியாக ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இயல்பான ருசி பாதிக்கப்படும். முட்டையில் கரு உருவாவதை தடுக்க அவற்றை அவ்வப்போது அசைத்தல், இடம் மாற்றுதல் போன்ற எளிய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

Post a Comment