Header Ads



முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகுராணிப் போட்டி

(TN) இந்தோனேஷியாவில் சர்ச்சைக்கு மத்தியில் நடைபெறும் உலக அழகு ராணிப் போட்டிக்கு பதலடியாக முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகுராணிப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘உலக அழகு ராணிப் போட்டிக்கு இஸ்லாத்தின் பதில்’ என்ற தொனிப்பொருளிலேயே இந்த அழகுராணிப் போட்டி நடத்தப்படவுள்ளதாக அதன் நிறுவனர் எகா ஷான்டி, ஏ. எப்.பி. செய்திச் சேவைக்கு கூறினார். எதிர்வரும் புதன்கிழமை தலைநகர் ஜகார்த்தாவில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

“முஸ்லிம் உலக அழகு ராணிப் போட்டி, உலக அழகு ராணிப் போட்டியில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். இதில் பங்கேற்கும் நீங்கள் மத பக்தி கொண்டவராகவும், நவீன உலகில் ஆன்மீக வாழ்வில் சமநிலையைப் பேணுவது குறித்து முன்மாதிரியானவராகவும் இருக்க வேண்டும்” என்று ஷான்டி குறிப்பிட்டார்.

இணையத்தளத்தின் மூலம் இடம்பெற்ற தேர்வில் 500 பேரில் இருந்து 20 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் குர்ஆன் மனனம், ஹிஜாப் அணிவது குறித்த தனது கதை போன்றவை போட்யில் அவதானம் செலுத்தப்படுகிறது. ஈரான், மலேஷியா, புரூனாய், பங்களாதேஷ், நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் அணிவகுத்துச் செல்லவுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் பெண்கள் கண்ணியமின்றி உடையணிவது மறுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் நடைபெறும் உலக அழகு ராணி போட்டிக்கு அங்கு நிலவிய எதிர்ப்பு காரணமாக நீச்சலுடைப் போட்டிப் பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்ட தோடு, போட்டிகள் நாட்டின் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாலி தீவுக்கு மாற்றப்பட்டது.

No comments

Powered by Blogger.