Header Ads



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ‌ச‌கோதரிகள் தற்கொலை

திருமணமாகாததால் விரக்தியடைந்த பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணம் , லோதரன் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு ‌ச‌கோதரிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மனிரா, ஜீனத், நஜியா, பைசா என்ற நால்வரும், 23 முதல் 35 வயது கொண்டவர்கள். தற்கொலை முயற்சியில் ஐந்தாவது சகோதரியான பர்வீன் என்பவர், கிராம மக்களால் மீட்கப்பட்டார்.

கடுமையான வறுமை காரணமாக திருமணம் தள்ளிப்போனதே இவர்களின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் என, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, இறந்த பெண்களின் தந்தையான பஷீர், ‘மொத்தம் ஏழு பெண்களில், இருவருக்கு மட்டுமே திருமணம் செய்ய முடிந்தது. வறுமை காரணமாக மற்ற பெண்களின் திருமணம் தள்ளிப்போனது,’ என்று கூறி கதறினார்.

No comments

Powered by Blogger.