Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில், பிரபாகரனின் கொள்கைகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, காணி, காவல்துறை, கல்வி, சமூக, பொருளாதார அதிகாரங்களை கோருகின்றது.  வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

இவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோரிக்கைகள்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர், பிரபாகரனை ஒரு வீரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவியுடன் கிழக்கில் ஆட்சியை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அப்ப உன்னத்தவிர வேறு யாரும் நல்லா இருக்கக்கூடாது நீ முன்பு பிச்சை எடுத்ததைப்போல பிச்சை எடுக்கணும் இல்ல.

    நீ மற்றும் சம்பிக்க, கலகொட சிங்கள ராவய பன்னாடைகள் எல்லோராலும் தான் நாட்டில் பிரிவினைவாதம் உண்டாகின்றது. முதலில் உங்களைப்போல தீவிரவாதிகளை களை பிடுங்கவேண்டும்.

    ReplyDelete
  2. நாட்டில் சாமாதானம் பிறக்கவேண்டுமென்றால் இனவாதம் இறக்கவேண்டும்.

    இனவாதம் வாழவேண்டுமென்றால் இனவாதிகள் சாகவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.