Header Ads



புல்மோட்டையில் நில அளவையாளர்களை தடுத்துநிறுத்திய முஸ்லிம்கள்


(மா.ச.உறுப்பினர்.அன்வர்)

புல்மோட்டை அரிசிமலை அண்டிய பகுதிகளை உள்ளடக்கிய  மற்றும் தொல்பொருளுக்கான காணிகளை அடையாளமிட்டு எல்லைகளை இடுவதற்காக வருகை தந்த நில அளவையாளர்களை மக்கள் அளக்கவிடாது வீதியில் இறங்கியதை அடுத்து அளவைளர்கள் பொலிஸ் நிலையதை நோக்கி புறப்பட்டனர் பின்னர் பொலி அத்தியட்சகர் சிசில் பெர்னாண்டோவினால் பிரதேச செயலாளரை பொலிஸ் நிலையத்துக்கு வருகை தரும்படி வேண்டியதை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கனேகொட குச்சவெளி பிரதேசத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் சிசில் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் மாகாண சபை உறுப்பினர் அன்வர் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக் பிரதி தவிசாளர் தௌபீக் உறுப்பினர்களான சல்மான் பதுறுத்தீன் புல்மோட்டைக்கான அகில இலங்கை யம்மித்துல் உலமா சபை பள்ளிவாயல்களின் தலைவர்கள் நில அளவையாளர்   உட்பட பல பிரமுகர்களின் தலைமையில் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளரின் 2013.08.29 ம் திகதியிடப்பட்ட கடிதத்திற்கமைவாகவே தான் அளவை மேற்கொள்ள வருகை தந்ததாக நில அளவை உத்தயோகத்தர் கூறினார் பின்னர் பிரதேச செயலாளருக்கு ஏற்கனவே 19.08.2013ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தற்காலிகமாக அளவை நிறுத்தும்படி அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று திடீரென பிரதேசத்தின் வருகை மக்களை குழப்பமடையச் செய்துள்ளது எனவும் அரசியல்வாதிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கேள்வி எழுப்பிதோடு ஏற்கனவே பல முறை சொல்லப்பட்டதன் பிரகாரம் மக்களுடைய குடியிருப்பு மற்றும் தோட்டக்காணிகள் இனங்காணப்பட்டு பின்னர் அளவையை மேற்காள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் வேண்டியதை அடுத்து பிரதேச செயலாளர் தனது அரசாங்க அதிபரோடு இதுவிடயமாக கலந்துரையாடி எல்லைக் கல்லிடாத மாதிரி வரைபடம் தயாரிக்கும் படியும் அதனூடாக மக்களின் காணிகள் அவர்களைக் கொண்டு முதலில் அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தீர்க்கமான நில அளவை மெற்காள்ளப்படும் என்று பிரதேச செயலாளரினால் கூறப்பட்டதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.



No comments

Powered by Blogger.